Sunday, November 3, 2013

இசைப்பிரியா கொலை தொடர்பில் சுயாதீன விசாரணை தேவையாம்! ஈபிடிபி

விடுதலைப் புலிகள் அமைப்பில் ஊடகவியலாளராக அறிய ப்பட்ட இசைப்பிரியா விவகாரத்தில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈ.பி.டி.பி யினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் சார்பாக ஈ.பி.டி.பி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்ற உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர். இந்த நிலையில் சனல் 4 தொலைக்காட்சி போர்க் குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப்பிரியா படுகொலை தொடர்பான ஒளிப்படக் காட்சிகள் உலக நாடுகளை மட்டுமல்ல உலக நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களை அதிர்சிக்குள்ளாகியுள்ளது.

அத்தொலைக்காட்சி இசைப்பிரியாவை உயிருடன் இராணுவத்தினர் கைது செய்த காட்சியை ஒளிபரப்பு செய்துள்ளமை தமிழ் மக்களை எரிச்சலடையச் செய்துள்ளது. நம்பிக்கைகளை தகர்ந்து போகச் செய்துள்ளது. மனித நேயமுள்ளவர்களை உலுப்பியுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் இசைப்பிரியா கைது செய்யப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பதான செய்திகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை நடத்தப்பட்டு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும். சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்படின் நீதியின் முன்னால் நிறுத்தப்பட்ட வேண்டும்.

அதுவே இறுதி யுத்தம் தொடர்பாக தமிழ் மக்களிடம் எழுந்திருக்கும் படுகொலைகள் தொடர்பான அச்சங்களும் சந்தேகளுக்கும் விடைகாண்பதாக அமையும். இதனால் மக்களிடையே இருக்கும் சந்தேகங்களுக்கும் அச்சங்களுக்கும் நியாயமும் பரிகாரங்களும் காணப்பட வேண்டும்.

ஆகவே எமது கோரிக்கைக்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் உண்மையை வெளி உலகிற்கு தெரியப்படுத்துவார் என எதிர்பார்க்னிள்றோம்' என குறித்த கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 comments :

Anonymous ,  November 3, 2013 at 8:48 PM  

இது வரவேற்கக்கூடிய அறிக்கை. VS.Drammen

கரன் ,  November 3, 2013 at 9:07 PM  

அர்புதன் எனப்படும் ரமேஸ் எனும் அற்புதமான ஓர் எழுத்தாளரின் கொலை தொடர்பிலும் சுயாதீன விசாரணை வேண்டும்.

ஆடு நனையுதென்று ஓநாய் அழுத ஓள் போதும் பொத்திக்கிட்டு இருங்க..

புலி பசித்தாலும் புல்லுத்தின்னாது. இசைப்பிரியா கொள்ளையின் கடி நஞ்சை குடித்தபின் சாய்தன என்ற புலிகளின் பாட்டை வன்னி இளைஞர் யுவதிகளுக்கு போட்டுக்காட்டிய வீராங்கணை. அவ சும்மா கொள்கையின் கடிநஞ்சை குடிக்காமல் இப்படி குண்டியை மறைத்துக்கொண்டு நிப்பாவா.. சும்மா கொஞ்சம் யோசிக்க வேண்டாமா

ஈய ஈழ தேசியம் ,  November 3, 2013 at 11:41 PM  

விஜய் அஜீத் படங்கள் தீபாவளிக்கு வெளியிடுவது மாதிரி புலி பன்னாடைகள் பணம் கொடுக்க சனல் 4 தொலைக்காட்சி இசைப்பிரியா போன்ற படங்களை அவ்வப்போது தயாரித்து வெளியிடும்.இந்த டக்ளஸ்சுக்கு என்ன நடந்தது.

Anonymous ,  November 4, 2013 at 12:14 PM  

History is what it repeats.Each of has our own history, which is unexplainable.

Anonymous ,  November 4, 2013 at 2:30 PM  

We are all Tamils. There is no difference between us. We all together.should fight for justice and peace.

Well done Mr. Devanantha!

arya ,  November 7, 2013 at 4:56 PM  

EPDP ex.MP confirm, that ரமேஸ் son in england told , his father killed by EPDP Douglas group.
Sri lankangoverment need control Douglas contacts in abroad and his finance, he had been secret link with LTTE intelianges.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com