சிகரட் கடத்தல் ஆசாமி புறக் கோட்டையில் சிக்கினார்
கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிகரெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி ஒரு லட்சத்து எழுபத்து இரண்டாயிரத்துக்கும் அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் சிகரெட்டுக்கள் புறக்கோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment