Thursday, November 14, 2013

நான் எவரையும் சந்திக்கவோ பேச்சுவார்த்தை நடாத்தவோ தயாராக உள்ளேன்! ஆனால் நாட்டை பிரிக்க இடமளியேன் - மகிந்த

நாங்கள் என்றும் திறந்த மனதுடனேயே உள்ளோம் எங்க ளுக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எவருடனும் நாம் பேசத் தயார். ஆனால் நாட்டைப் பிரிக்க ஒருபோதும் இட மளியேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். நாளை பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடக கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், பல நாடுகளிலிருந்தும் ஊடக வியலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் இங்குள்ள உண்மை நிலையை அறிய விருப்பம் கொண்டவர்களாக இருப்பின் தான் மகிழ்ச்சியடை வதாகவும் கூறிய அவர் அவர்கள் எல்ரீரீஈ ஆதரவாளர்களுடனோ அல்லது அவர்கள் சார்பாக வருகை தந்துள்ளவர்களுடனோ மாத்திரம் பேச்சுவார்த்தை நடாத்தாமல் எங்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும். தனது கொள்கை சகலரது மனங்களையும் வெற்றிகொள்வதேயாகும் எனவும் கூறினார்.

சரணடைந்த 14000 எல்ரீரீஈ உறுப்பினர்களை குறுகிய காலத்துக்குள் புனர்வாழ் வளித்து சமூகத்தில் இணைத்துக்கொண்டதுடன் யுத்தத்தில் இணைத்துக் கொள்ளப் பட்ட சிறுவர்களை குறுகிய காலத்துள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத் துள்ளோம் எனவும் சுட்டிக் காட்டிய அவர் இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின், அவை தொடர்பில் கண்டறிந்து உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி உரிய தண்டனைகள் வழங்கப்படும் என்று இதன்போது குறிப்பிட்டார்.

30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் நாம் பாதிப்புற்றுள்ளோம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வரை படுகொலை செய்யப்பட்ட பெண்கள், கர்ப்பிணி பெண்கள் பிள்ளைகள் மழலைகள் பற்றி பேசாமல் 2009 ம் ஆண்டைப்பற்றி மாத்திரம் பேசுவதேன்? 2009 க்கு முன்பு தினமும் மக்கள் பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றன. தற்போது அவை யாவும் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏதாவது முறைகேடான வகையில் நடந்திருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடி க்கை எடுக்க நாம் தயாராகவுள்ளோம் தான் எவரையும் சந்திக்கவோ பேச்சு வார்த்தை நடாத்தவோ தயாராக உள்ளதாக ஜனாதிபதி கூறினார். நாட்டை பிரிப்பதற்கு மாத்திரம் இடமளிக்க போவதில்லையென கூறிய ஜனாதிபதி யுத்தத்தின் பின்பு மக்கள் சமாதானத்துடன் வாழ்கின்றனர் எனவும் கூறினார்.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட குழுவினர் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கு வந்துள்ளமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய வெளிவிவகார அமைச்சர் இங்கு எம்மோடு உள்ளார். இது எனக்கு திருப்தியளிக் கிறது என்று ஜனாதிபதி கூறினார்.

தமிழ் நாட்டிலுள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இந்திய பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை விஜயத்தை தவிரித்துக்கொண்டுள்ளார் என்று தெரிவிக் கப்படுகிறதே என இந்திய ஊடகவியலாளர் ஒருவர் ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்கு இந்தியாவின் பங்கேற்பை தான் முழுமையாக ஏற்றுக் கொண்டதா கவும், அவ்வாறு ஒரு விடயத்தினை இந்திய பிரதமர் எனக்கு சொல்லவில்லையே' என்று குறிப்பிட்டார். அத்துடன், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சிட்டினியில் நடைபெற்ற மாநாட்டிலும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை என்பதையும் ஜனாதிபதி இதன்போது ஞாபகமூட்டினார்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்குபற்றுவதன் மூலம் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு எவ்வித குறைபாடும் ஏற்படப் போவதில்லை என்பதை இந்தியா தனது விஜயத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

1 comments :

Anonymous ,  November 14, 2013 at 7:18 PM  

A small country cannot be dived into pieces.It would be unreasonable.Why we develop hatred in our minds.Why not we live together and share the rights equally.politics is a kind of illusion,once we fall into their snare it would be hard to come out.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com