Friday, November 8, 2013

ஊழியர்களின் நன்மையை மட்டும் எதிர்பார்க்கவில்லை. சேவையை நாடி வரும் மக்களின் வசதிகளை கருத்திற்கொள்ளவேண்டும்!

மக்கள் தேவைகள் தொடர்பில் புதிதாக சிந்தித்து, அதிகபட்ச சேவைகளை வழங்குமாறு, ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் மூலம், இங்கு பணியா ற்றும் ஊழியர்களின் நன்மையை மட்டும் நாம் எதிர்பார்க் கவில்லை. சேவையை நாடி வரும் மக்களின் வசதிகளை யும் நாங்கள் விசேடமாக கருத்திற்கொள்வோம். அதற்கா கவே, இதுபோன்ற கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், அனைவரும் இப்புதிய கட்டிடங்களிலிருந்து புதிய சிந்தனைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மக்களுடன் நெருங்கி செயற்படும் ஓர் அமைப்பு, பிரதேச சபைகளாகும். இங்கு பணியாற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு காரணமாகவே, அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் ஏற்பட வழிகோலுகிறது.

இவ்வூழியர்களின் சேவை மூலமே, மக்கள் அரசாங்கத்தை எடைபோடுகின்றனர். அனைத்து ஊழியர்களும் இணைந்து மக்களுக்காக சேவையாற்றும் கடப்பாடு உள்ளது. மக்களின் நன்மைக்காகவே, அரசியல் வாதிகள் தெரிவு செய்யப்படு கிறார்களே அல்லாமல், தங்களின் சொந்த நலனுக்காக தெரிவு செய்யப்படுவதில்லை யென்பதை, அரசியல் வாதிகள் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

வீரகெட்டிய பிரதேச சபையின் புதிய கட்டிடத்தொகுதியை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாடு தற்போது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இலங்கை, மத்திய தர வர்க்க மக்களை கொண்ட நாடாக மாறி யுள்ளது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த வளர்ச்சி எட்டப்பட்டுள் ளதாகவும், ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

மக்கள் இது தொடர்பில், மிகவும் பெருமையுடன் பேசுவதாக நினைவு கூர்ந்த ஜனாதிபதி, எதிர்கால சந்ததியினருக்காக கட்டியெழுப்பப்படும் நாட்டை பாதுகாத்து, முன்நோக்கி செல்வதற்கு அனைவரும் தன்னை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், தெரிவித்தார். சேவைகளை நாடி வரும் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, சிறந்த மக்கள் சேவையொன்றை ஆற்றும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட வீரகெட்டிய பிரதேச சபை கட்டிடத்திற்காக, 50 மில்லியன் ரூபா செலவிடப் பட்டுள்ளது. நூல் நிலையம், கேட்போர் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் முக்கிய அமைச்சர்கள் பலரும், இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இதேவேளை, வீரகெட்டிய பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடமும், ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. சகல வசதிகளையும் உள்ளடக்கியுள்ள இந்த மூன்று மாடி கட்டிடம், 45 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக் கப்பட்ட ஹம்பாந்தோட்டை மாவட்ட கிராமிய வ ங்கி சங்கத்தின் புதிய மாடிக்கட்டிடத்தையும், ஜனாதிபதி திறந்து வைத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com