Monday, November 11, 2013

மத்திய வங்கி நூதனசாலை ஜனாதிபதியால் திறப்பு!

கொழும்பு சத்தாம் வீதியில் 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த சென்ட்ரல் பொயின்ட் கட்டடம் புன ரமைக்கப்பட்டு அதில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய வங்கியின் நூதனசாலை ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ இன்று (11.11.2013) திறந்துவைத்தார்.

இந்தக் கட்டடம் புலிகளின் தாக்குதலினால் மிகவும் மோசமான முறையில் சிதைவடைந்திருந்தது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவி ருத்தி செயலாளரின் பணிப்பின் பேரில் இக்கட்டடம் புனரமைக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

அது மட்டுமல்லாது பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு மத்திய வங்கியால் புதிதாக வெளியிடப்பட்ட 500 ரூபா நாணயத்தாள் இந்த வைபவத்தின்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

0 comments :

எம்மை தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com