Friday, November 15, 2013

யாழில் நடைபெறும் ‘கட்டின பிங்கும’பெரகர! (படங்கள் இணைப்பு)

யாழில் புத்த பெருமானுடைய திருச்சொருபத்துடன் ஜம்பெரும் தெய்வங்களும் பவனி வரும் ‘கட்டின பிங்கும’நிகழ்வு(14.11.2013) மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறுகிறது.

யாழ் நாகவிகாரையில் நான்காவது ஆண்டாக நடைபெறும் ‘கட்டின பிங்கும’ பெரகர நிகழ்வில் புத்த பெருமானுடைய திருச்சொருபம், பிள்ளையார், சிவன், முருகன், விஸ்ணு மற்றும் முத்தேவியர்கள் ஒன்றிணைந்த ஒரு சொருபம் என்பன இந்த பெரகரா நிகழ்வில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

கடந்த பல வருடமாக புத்தபெருமானுடைய திருச்சொரூபம் மட்டுமே இந்த நிகழ்வின்போது எடுத்து வரப்பட்டது ஆனால் கடந்த வருடம் வரை பௌத்த சமயம்வேறு இந்து சமயம் வேறு என் எல்லோராலும் தெரிவித்ததையே அதிகமானவர்கள் நம்பியிருந்தனர்.

ஆனால் இரண்டும் ஒண்றுதான் என்பது பொரும்பாலானவர்களுக்கு தெரியாது இதனாலேயே ஒரு சிலர் இந்து வேறு பௌத்தம் வேறு எனக்கூறி வருகின்றனர் இதனால் இந்துக்கள் மற்றும் பௌத்தர்களுக்கிடையில் வேற்றுமைகள் தோன்ற ஆரம்பித்தது இதனால் இந்து, பௌத்தம் வேறு வேறு இல்லை என்பதை எடுத்துக்காட் கடந்த வருடம் முதல் பெரகர நிகழ்வில் புத்த பெருமானுடன் சேர்த்து ஜம்பெரும் தெய்வங்களையும் ஊர்வலமாக எடுத்து வரப்படது.

நாயக்க வணபிதா மற்றும் யாழ் நாகவிகாரை வணபிதா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய நிகழ்வு(15.11.2013) மதியம் 2.00 மணிவரை நடைபெற உள்ளதுடன் இறுதியில் மதிய போசனமும் வளங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் யாழ் அரசாங்க அதிபர் மற்றும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதகுருக்கள் மற்றும் மாணவர்கள், இராணுவத்தினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

1 comments :

Anonymous ,  November 15, 2013 at 10:45 AM  

This is the symbol of unity of the nation.Politicians always try to turn this event into a different direction.But the cleverness of the people and devotees would take no notice of any evils attacks.May we have more different religious ceremonies around NP in future.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com