Friday, November 15, 2013

போயிங் 747 விமானம் கதவு திறந்த நிலையில் பயணித்து பயணிகளைப் பெரும் பீதிக்குள்ளாக்கியது! நடுவானில் அதிர்ச்சி (காணொளி இணைப்பு)

ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ஜம்போ ஏஐ 964 என்ற விமானம், இன்று காலை சவூதி அரேபியா ஜித்தா நகரிலிருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 400 பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த அந்த விமானத்தின் விமானி அறையின் ஒரு கதவு சரியாக மூடப்படாதது குறித்து விமானி அறையின் கருவி எச்சரித்தது.

இதையடுத்து அந்த விமானம் மீண்டும் ஜெட்டா நகர விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனர். ஜெட்டா விமான நிலைய என்ஜினியர்கள் கதவு சரிசெய்தனர். இதையடுத்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பிறகு அந்த விமானம் புறப்பட்டது.

இதனால் விமானம் ஐதராபாத்திற்கு செல்லாமல் நேராக மும்பைக்கு பத்திரமாக வந்து இறங்கியது. பின்னர் ஐதராபாத் பயணிகள் மற்றொரு விமானத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.

இந்த இணைப்பில் காணொளியைப் பார்க்கலாம்... http://indiatoday.intoday.in/video/jeedah-mumbai-bound-air-india-flights-door-opens-midway/1/325027.html

2 comments :

Anonymous ,  November 16, 2013 at 12:03 AM  

Please avoid Indian Airlines and products from india, choose chinese products, they are our true friends for sri lankan, SL goverment have now right time to give North Islands to China for a 100 years aggreement incl. Kachchativu.

சிவாஸி ,  November 16, 2013 at 5:16 PM  

காணொளி வருகுதில்லை என்ன ஆச்சு செக் பண்ணுங்க?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com