வாழைக்குலை திருட்டிற்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறை!
வாழைக்குலையை திருடியதாக சந்தேக நபர்கள் இருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறித்த நபர்கள் இருவருக்கு எதிரான வழக்கு விசாரணை நேற்று நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக் கப்பட்டதையடுத்து குற்றவாளிகள் இருவருக்கும் தலா 3 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத்தண்ட னையையும் வழங்கி நீதவான் அஜித் எம். குணசிங்க தீர்ப்பளித்தார்.
0 comments :
Post a Comment