Tuesday, November 19, 2013

யாழில் யுத்த காலப் பகுதியில் இழப்புகளுக்கான 336 பேருக்கு நஷ்டஈடுகள் !!

1990 ஆம் ஆண்டுக்கு பின்னரான யுத்த காலப் பகுதியில் இழப்புகளுக்கான நஷ்டஈட்டுக்காக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங் களிலிருந்து விண்ணப்பித்த 336 பேருக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டன. மேலும் வடமாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பௌத்த விகாரைகள், இந்துக் கோவில்கள் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் இதன்போது 28 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சும் புனர்வாழ்வு அதிகாரசபையும் இணைந்து நஷ்டஈடுகள் வழங்குவதற்கான நிகழ்வை ஏற்பாடு செய்தது.

வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர,கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன்,புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் சந்திரசிறி முத்துக்குமார, வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com