Monday, October 14, 2013

கிராமத்தை கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டை கட்டியெழுப்பமுடியும்-ஏ.எல்.எம்.அதாஉல்லா!

உள்ளூராடசி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் புறநெகும செயற்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிரீபாவ பிரதேச சபைக்கான நிருவாக கட்டிடத்திற்கான அடிக்கல்லை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் நேற்று(13.10.2013 நடப்பட்டது.

30 மில்லியன் ரூபாவில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டதிற்காக மொத்தமாக 108 வருமாணம் குறைந்த உள்ளூராட்சி சபைகள் இனங்காணப்பட்டுள்ளன அதனுள் 8வது இடத்திலுள்ள சபையாக கிரீபாவ பிரதேச சபை காணப்படுவதுடன் இந்த நிருவாக கட்டிட வேலைத் திட்டம் எதிர்வரும் 2014 ஏப்ரல் மாதம் நிறைவு பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிதமஅதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இன்று உள்ளூராட்சித் துறையில் பலதரப்பட்ட அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதன் நோக்கம் உள்ளூராட்சி சபைகள் ஊடாக மக்கள் சிறந்த சேவையைப் பெற்றுக் கொள்வதேயாகும்.

கிராமத்தை கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற எண்ணக் கருக்கமைவாகவே புறநெகும திட்டம் எனது அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டதுடன் இன்று வருமாணம் குறைந்த 108 சபைகளை இனங்கண்டு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அவற்றிற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் எனது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது எனக்குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறீ ஜயசேகர, உள்ளூராட்சி மாகாண சபைகள் பிரதி அமைச்சர் இந்திக்க பன்டாரநாயக்க, மாகாண சபை உறுப்பினர்கள், கிரீபாவ பிரதேச சபை தவிசாளர், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.அப்துல் மஜீத், புறநெகும செயற்த்திடடத்தின் பணப்பாளர் ஆனந்தகமகே மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பிரமுகர்களும் பொது மக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com