Sunday, October 6, 2013

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் குடும்பக் கட்டுப்பாட்டு செயல்திட்டத்தை சந்தேகிக்கும் ராமதாஸ்.

சமூகக் கலைஞர்கள் (The Social Architects (TSA) என்று அறியப்படும் அடையாளம் காணப்படாத குழுவொன்றி னால் ”கிளிநொச்சியில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு” (‘Coercive Population Control in Kilinochchi) மேற்கொள்ளப்படுவதாக சர்ச்சைக்குரிய அறிக்கை வெளிவந்துள்ளது. இது இலங்கையில் மட்டுமன்றி பன்னாட்டு அளவிலும் அமளியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 68 வது ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய பசுமை தாயகத்தின் தலைவரும் முன்னாள் இந்திய மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இதை ‘மனிதக் கொலை’ என்று குறிப்பிட்டு இது தொடர்பான விசாணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஐநா-வைக் கோரியுள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள வேரவில், வலைப்பாடு மற்றும் கெரஞ்சி ஆகிய ஊர்களில் பெண்கள் கிளினிக்குகள் மற்றும் பாடசாலைகளில் ஒன்று திரட்டப்பட்டு அவர்களின் மேற்கையில் புறோகெஸ்டறோன்-ஒன்லி-சப்டேர்மல் இம்பிளான்ற் (Progesterone-only-subdermal implant -POSDI) என்ற கருத்தடை மருந்து உட்செலுத்தப்பட்டுள்ளதா என்று விசாரணை செய்வதற்கு கடந்த வாரம் இலங்கையின் பிரபல வாராந்த ஆங்கிலப் பத்திரிகையொன்று, கிளிநொச்சிக்குச் சென்றது.

ரிஎஸ்ஏ அறிக்கை

அறிக்கையின் படி, தங்களது பிள்ளைகளின் ஊட்டச்சத்து சம்பந்தமான மருத்துவப் பரிசோதனைக்கு என்று போலியான காரணத்தைச் சொல்லி பல பெண்களை இந்த கிளினிக்குகளுக்கு வரச் செய்ததாகவும் அங்கு போனவுடன் அவர்களுக்கு இந்த கருத்தடை முறை பற்றி அறிவிக்கப்பட்டதாகவும் அது அவர்களின உடல் நலத்துக்கும் அதிக குழந்தைகளை பெறாமல் இருப்பதற்கும் அவசியம் என்று கூறப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இது பற்றி ஆழமாகச் சிந்திப்பதற்கோ தங்களின் கணவன்மாரிடம் ஆலோசனை கேட்பதற்கோ இடம் தராமல் கட்டாயப் படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றார்கள்.

இது கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை விசேட மருத்துவ நிபுணர்கள் வருகை தந்து செயற்படுத்தும் திட்டமாகவும் அறியமுடிகின்றது.

POSDI என்பது மீள் மாறும் நவீன குடும்பக் கட்டுப்பாடு முறையாகும். கையின் மேற்புறத்தில் செலுத்தினால் ஐந்து ஆண்டுகள் வரை கர்ப்பம் ஏற்படாமல் தடுக்கவல்லது. Subdermal implantable contraceptives உயர் வினைத்திறன் மிக்கது எனவும் பயன்படுத்த இலகுவானது என்றும், மிகக்குறைந்’த பக்க விளைவு உள்ளது என்றும் WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு கூறுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com