Saturday, October 5, 2013

வடக்கின் அமைச்சுப் பொறுப்புக்கள் கற்றவர்களுக்கு மட்டுமே! - விக்கி

வட மாகாண சபைக்கான புதிய அமைச்சர்களாக நியமிப்பதற்கு கல்வித் தகைமை மிக்கவர்களின் பெயர்ப்பட்டிய லை மாத்திரம் தமக்குத் வழங்குமாறு வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

போதியளவு கல்வித் தகைமைகள் இல்லாதவர்களை தனது அமைச்சரவைக்கு உள்வாங்குவதில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபையின் அமைச்சரவைக்கு அமைச்சர்களைத் தெரிவுசெய்யும் விசேட கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றபோதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கின் அரசியலை தமிழ் தேசியக் கூட்டமைக்குச் நடாத்துமாறும், தனக்கு மாகாண நிருவாகத்தை வழங்குமாறும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டத்தில் கூடியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகளிடம் வேண்டியுள்ளார்.

(கேஎப்)

5 comments :

ச. ஜேசுநேசன் ,  October 5, 2013 at 5:58 PM  

மாகாண சபையில் அரசியல் வேண்டாம். சரியான முடிவு. மாகாண சபையில் அரசியல் செய்துகொண்டிருந்தால் இன்னும் 25 ஆண்டுகளில் வடமாகாணம் மயானமாகத்தான் காட்சியளிக்கும். வரதராஜப் பெருமாள் மாகாண சபையில் அரசியல் செய்யப் போய்தான் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் வடக்கு-கிழக்கில் மாகாண நிர்வாகம் இல்லாமல் வடக்கு கிழக்கு என்று பிரியும் நிலையும் ஏற்பட்டது.அரசியல் பாராளுமன்றத்தில், அபிவிருத்தி மாகாண சபையில் - ச. ஜேசுநேசன்.

karan ,  October 5, 2013 at 6:54 PM  

அப்ப டக்ளஸ் பிள்ளையான் கருணா என்று பெரிய பட்டியல் ஒன்றே நீண்டு கொண்டு செல்கின்றது. அப்ப இவர்களின் நிலைமை என்ன?

இந்த விடயத்தினை அவர்களை தேர்தலில் நிறுத்துவதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யோசித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இனவாதத்தை கக்குவதற்கும் மக்களை உணர்ச்சி ஊட்டுவதற்கும் படிப்பறிவில்லாத முட்டாள்கள் வேண்டும். அமைச்சு பதவி படித்தவர்களுக்கு என்னா அறிவுங்கு அறிவு..

ஓம் ஓம் இதாலதான் சுரேஸ் பிறேமச்சந்திரன் நான் இந்தியாவில பட்டம் பெற்றுவிட்டேன் என்ற கூறுகின்றார் போலும். நல்லது நல்லது நடக்கட்டும்; நடக்கட்டும்.

அப்ப இயக்ககாரர் எல்லாம் இனி போகவேண்டியதுதான்..

Anonymous ,  October 5, 2013 at 7:04 PM  

Excellent!
The Northern provincial government would be an example for others in Sri Lanka.
This is the way we can improve ourselves, earn respect and develop our country as like western countries.
We salute our Hon.CM. He should be our President of Sri Lanka.

Anonymous ,  October 5, 2013 at 7:37 PM  

ச. ஜேசுநேசன் அவர்களே, பிழையான கருத்து!

உண்மையில் வட கிழக்கு இணைந்த மாநில சுய ஆட்சியை இல்லது ஒழித்த பெருமை நிற்சயமாக புலிகளையும், அவர்களை உசுப்பேத்திய புலன் பெயர் புலிப் பினாமிகளையும் மட்டுமே சாரும்.

Vanni people

அன்று, மேதகு தலைவர் பிரவாகரனின் அறிவு, மதி நுட்பத்தில் மற்றும் அறிவுக்கொழுந்துகளின் ஆலோசனை, புலன்பெயர் கூட்டத்தின் ஆதரவுகளுடன்,

தமிழ் மக்களுக்கு கிடைத்த அறிய சந்தர்ப்பம், கைக்கு எட்டியும் வாயிக்கு எட்டவில்லை.

பிரவாகரனின் தன்னல, முட்டாள்தன செயல்பாட்டின் பின்னர் தான் வரதராஜ பெருமாளை இந்திய அரசாங்கம் அணுகியது. சரி எல்லாம் எமது நன்மைக்கே என்று சரிப்பட்டு வர விட்டார்களா?

அகங்காரம், கர்வம், தலைக்கனம், இறுமாப்பு கொண்டு எல்லாவற்றையும் நாசமாகி, இறுதியில் தங்களுக்கும் அழிவை தேடிக்கொண்டனர் என்பதே உண்மை சரித்திரம்.

உண்மைகள் என்றும் உறங்க மாட்டது.

Anonymous ,  October 6, 2013 at 4:03 AM  

அரிவுள்ள்வர்கும் அரிவ்ற்றவர்கும் உள்ள் வித்தியாசம் இதுதான்;

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com