Monday, October 21, 2013

இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு வழிகோலக் கூடாது...! அரசியல் தூரநோக்கு அவசியம்!! -செய்யது ஹுஸைன்

மேட்டுக்குடி, நாட்டுக்குடி போன்ற சாதி,மத பேதங்களை இலக்கியமாக்கி, அதனை அரசியலாக்கிய பெருமை கலைஞர் கருனாநிதிக்கே உரியது. இன்று எமது நாட்டின் நிலமை வேறு. 30 வருடங்கள் இரத்தம் சிந்திய வடக்கு ஒரு முள்ளி வாய்க்காலை சந்தித்தது. இது தமிழீழம் தந்த பரிசு. மனஒழுக்கம் இல்லாத பேரினவாத அரசியல் வாதிகளுக்குள் நாடு இன்று முழுமையாகச் சிக்கியுள்ளது. சிங்கள மக்களின் கொந்தளிப்பை திசைதிருப்ப இது இசைவாக மாறிவிட்டது. தமிழர்களின் பலவீனத்தை, இவர்களின் துயரத்தை, இனசம்காரத்தை சாதகமாக்கிய தமிழக அரசியல்வாதிகளான கலைஞர் கருணாநிதி,நக்கீரன், திருமாவளவன், கோமாளிச்சாமி, கனிமொழி போன்றவர்கள் மேலும் இன்னொரு முள்ளி வாய்க்காலுக்கு வழிகோலக்கூடாது என்ற அச்சத்தில்தான் இதனை எழுதுகிறேன்.

அவ்வாறு ஒரு சூல்நிலை மீண்டும் உருவாகுமானால் இவர்களால் மூன்று மணித்தியாலங்கள் உண்ணாவிரதம் மாத்திரம்தான் இருக்கமுடியும் என்பதை ஈழத்தமிழன் நன்கு அறிந்துவைத்திருக்கின்றான், மேற்கு நாடுகள், மனித உரிமை அமைப்புக்கள், ஐநா நிறுவனம், போன்றவைகள் ஒரு பொழுதும் தமிழ்மக்களின் உணர்வுகளை முழுமையாக உள்வாங்கி அதற்கு மாற்றுவழி தேடித்தரும் என்ற நம்பிக்கையில் உண்மையில் நாம் இல்லை. காரணம் உலகம் தழுவிய துயரங்கள் அனைத்திற்கும் இந்த அமைப்புக்களும், மேற்கு நாடுகளும்தான் காரணம் என்பதை எம்மால் அறியமுடியாதபடி “உலகத் தீமை” வடிவமைக்கப்படுள்ளது. உலகவளங்களை மையப்படுத்திய ஒரு தேவை மேற்குலத்திற்கு இருக்கிறது.

எமது அயல்நாடான இந்தியாவின் துரோகநோக்கில் சிறிதும் மாறுபடாத ஒரு பார்வையை மாத்திரமே மேற்குநாடுகளும் எம்மில் வைத்திருக்கின்றது என்பதை நாம் உணரமுற்பட வேண்டும். தற்காலிகமான ஒரு சில அரசியல் காய்நகர்வில் இந்தியா எம்மை அரவணைத்து, சாதகமான சில முடிவுகளை எமக்கு வழங்கப்பாடுபடுகிறது, என்ற ஒரு மாயத்தோற்றம் எதிர்க்காலங்களில் காணக்கூடியதாக இருக்கலாம். இவை அனைத்தும் எதிர்நோக்குகின்ற பாராளுமன்ற தேர்தலில் சோனியா சந்திக்க போகின்ற வீழ்ச்சிநிலையை சரிபண்ணி தமிழ்நாட்டின் இன்றைய நிலையை மாற்றியமைக்கும் ஒரு உத்தியாகவே கருதவேண்டுமே தவிர வேரொன்றும் அதில் இல்லை எனலாம்.

எனவே எமக்கு மாற்றுவழி தேவை. அதனால் சம்மந்தன் ஐயா அவர்கள் அரசியல் தூரநோக்குடன் செயல்படுகிறார் என்று எண்ணத்தோன்றுகிறது. சத்தியப்பிரமாணத்தில் ஜனாதிபதியின் பங்களிப்பு, எமது இலக்கை அடைய அரசாங்கமும் ஒத்துழைக்கவேண்டும், என்ற அரசியல் தூரநோக்குள்ள சம்மந்தன் ஐயாவின் கருத்துக்களில் இருந்து இதையே நாம் ஊகிக்கவேண்டியுள்ளது. இதற்கு மேட்டுக்குடி, உயர்குலம், தாழ்ந்தகுலம் என்றெல்லாம் தலையைப்போட்டுக் குழப்பிக்கொள்வது காழ்புணர்ச்சியே எமக்கு எடுத்துக்காட்டுகிறது. யாரையும் நம்பமுடியாத இந்தச்சூழ்நிலையில் ஒரு தூரநோக்குள்ள,ஆளுமை, அறிவுள்ள அரசியல்வாதி இதைதான் செய்வார். ஏன் முள்ளிவாய்காலில் ஒரே தடவையில் இறந்துபோன 1 ½ லட்சம் மக்களின் உயிர்களின் உத்தரவாதத்திற்கு தமிழ் நாடு என்ன செய்தது? கலைஞர் என்ன செய்தார்? மேற்கு நாடுகள் என்ன செய்தன. மேற்கு நாடுகளும், இந்தியாவும், சீனா, பாகிஸ்தான், ரூசியா போன்ற நாடுகளுமே இந்த தீமைக்கு அத்திவாரமிட்டன என்பதை எம்மால் நம்பமுடியாமல் இருக்கிறது.

இது அடுத்த சமூகம் பற்றிய ஒரு கருத்து. முஸ்லிம் காங்கிரஸ் அன்று செய்த தவறினால் இன்று அரசியல் அலங்கோலமொன்று நாடு தழுவி அரங்கேறிவருகிறது. தமிழ் முஸ்லிம் இனங்களைப் பிரித்து, வடக்கு கிழக்கை நிரந்தரமாகப் பிரிக்கின்ற உத்தியை காலம்சென்ற தலைவர் அஷ்ரப் அவர்கள், அதற்கு வழிவகுத்துச் சென்றார் என்றால் அது மிகையாகுமா? இதைதான் இன்றைய பேரினவாதிகள் அன்று கனவுகண்டார்கள் என்பதை எமது தலைவர் அறிந்துகொள்ளவில்லை. அன்று முஸ்லிம் என்ற பெயரிலே காங்கிரஸ் உருவானதே மாபெரும் தவறாகும். காரணம் இன்றைய சிங்கள இனவாத அமைப்புக்கள் உருவாவதற்கு இதுவே வித்திட்டது. இன்று முஸ்லிம் காங்கிராஸ் பலமிழந்து, ஆளுமை அற்று, அறிவில்லதா, பேரினவாதத்திற்குச் சோரம் போய்,நாம் சூழ்நிலைக் கைதிகள் என்று ஓலமிடும் அளவிற்கு ஒற்றுமையை இழந்து சிதறிநிற்கின்றது.

பேரினவாதம் தமது முழு நோக்கத்தையும் நிறைவேற்றுவதற்கு இந்த கட்சி துணை நிற்பதே ஆச்சரியத்தை தருகிறது. மன ஒழுக்கமும், உடல் ஒழுக்கமும் இல்லாத இஸ்லாமியத் தலைமைத்துவம் இன்று ஏன் சிதறி நின்று எமக்கு சவாலாக செயல்படுகிறது என்பதை முஸ்லிம்கள் உணர முற்படவேண்டும். எமது அவலங்களை இன்று சம்பந்தன் ஐயா அவர்கள் வெளிநாடுகளுக்கு தெளிவுபடுத்துகின்ற அளவுக்கு எமது அரசியல்வாதிகள் இல்லாதது கவலையளிப்பது மாத்திரமல்லாமல் ஆச்சரியத்தையும் அளிக்கிறது. சிறுபான்மையினர்கள் என்ற அடிப்படையிலாவது நாம் இன்று ஒன்றுபடுவது காலத்தின் தேவையாகும். சூழ்நிலைக்கைதிகளையும், சுயநலக்கைதிகளையும் நாம் நம்பி எம்மை நாமே அழித்துக்கொள்ளக்கூடாது, என்பதுதான் எனது கருத்தாகும்.

அக்கால அரசியல் பற்றிய ஒரு கருத்து இது. மனிதன் தனக்காக வாழ்வதற்கு மேலே சென்று பிறருக்காக வாழ முயலும்பொழுதுதான் அதிமனித பண்புகளைத் தொடுகின்றான். மேலும் அழகிய இந்த உலகம் மிகவும் நல்லது. ஏனெனில் நாம் பிறருக்கு உதவி செய்வதற்கான நேரத்தையும், வாய்ப்பையும் அது தருகிறது. எனவே அரசியல் இந்த நோக்கங்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டதாக எமது முன்னோர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்று ஓரினத்தை அழித்து, இன்னொரு இனத்தை வாழவைப்பதே அரசியல் ராஜதந்திரம் என்ற அளவுக்கு இது வக்கிரப்படுத்தப்படுள்ளதுதான் வேதனையாகும்.

காரணம் பாராளுமன்றங்கள் பாசாங்கு மன்றங்களாக மாறியுள்ளன.வன்முறைக்கு இங்குதான் தூபமிடப்படுகிறது. இங்கு சத்தியம் முதலில் பலியிடப்படுவதுடன், யதார்த்தமும் மறைந்துபோகிறது. ஏனனில் பாசாங்குகளுக்கு முன்னாள் யதார்த்தம் மறைந்து போவது இயல்பானதே.இந்த நாட்டில் தமிழர்களும், இஸ்லாமியர்களுமாக 30 லட்சம் பேரளவில் வாழ்கின்றோம். உரிமைகளைக்கேட்க முடியாத, பேசமுடியாத, சொந்தக்கருத்தை எடுத்துக்கூறமுடியாத, எந்தச்சிறப்பும் இல்லாதவர்களாக மாற்றப்பட்டு வருகின்றோம். பெரும்பான்மையினரின் மத உணர்வுகளாலும் நாம் நசுக்கப்பட்டு வருகின்றோம். எனவே “நாம் தமிழ் பேசும் அடிமைகளேயன்றி” வேறொன்றும் இல்லையெனலாம்.

அதிலும் இரண்டாவது சிறுபான்மைச்சமூகம் சலுகைகளுக்காக மாத்திரம் வாழ்கின்றது. மதத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவ்வப்போது அவர்களது அமைச்சர்கள் சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதுடன் திருப்தி காண்கின்றனர்.எமது அரசியல்வாதிகள் பேரினவாதத்திற்கு சோரம் போவதே இதற்குக்காரணமாகும். பேராசை, ஆணவம், பாலியல் வக்கிரம் போன்ற தீயபண்புகளை உடைய எமது பாராளுமன்றப் பிரதநிதிகளால் வழிநடாத்தப்படுகின்ற ஒரு இழிவான சமூக அமைப்புக்குள் நாம் சிக்கியிருப்பதும், இவர்களை அடிவருடும் ஒரு உலமா அமைப்பு இவர்களுக்குச் சார்பாக மத வியாக்கியானம் செய்வதும் இன்றைய எமது அரசியல் தீமையாகும் என்பதை நாம் எப்போது உணரப்போகின்றோம்?

5 comments :

Anonymous ,  October 21, 2013 at 11:01 AM  

By comaprision they try to make our lives just equal to their worthless cinema trade,we must be cautious alert sensitive and cabale in our issues.Strangers always starngers and their magical plays are only
only eyewash

வத்துமுல்லை நேசம் ,  October 21, 2013 at 4:30 PM  

கூரைமீதேறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டத்துக்கு வழிகாட்ட முயற்சிப்பது போல இருக்கிறது
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் செயல்கள்.முதலில் அவர்கள் இந்தியாவில் சுதந்திரத் தமிழ்நாடு அமைக்கட்டும். அதன் பின்னர் தமிழீழம் அமைப்பதற்கு உதவலாம். இப்போது அவர்கள் செய்து கொண்டிருப்பதெல்லாம் ஈழத்தமிழருக்கு உபத்திரமே.

Anonymous ,  October 21, 2013 at 8:22 PM  

It is true and clear money being pumped into their hands for a false
corrupted and unusual propaganda service Money is so powerful than the missiles.This evil can bring all sorts of damages. So We have to be
alert as we are sorrounded by the
evils

Anonymous ,  October 22, 2013 at 10:02 AM  

பல்லின சமூகம் வாழும் ஒரு மண்ணில் அடுத்தவர்களின் உணர்வுகளை மதிப்பதும், மதம் சார்ந்த பண்புகளில் ஒன்றாகும்.பேரினவாத அரசுயல் இன்று இனங்களை மோதவிட்டு அரசியல் லாபமீட்டிக்கொன்றுக்கும் இவ்வேளையில் மதவாதிகள் சூலலறிவுடன் நடந்து கொள்வது அவசியமாகும். இவ்வாறு சிந்திப்பது மதவிரோதமல்ல. மத உரிமை என்பது மனித உரிமை என்பதை மனதில் கொண்டு நடந்து கொள்வது ஒன்றும் இறைவனுக்கு எதிரானதல்ல.மாட்டை புனித விலங்காகக் கருதும் மக்கள் சமூகம் வாழும் ஒரு மண்ணில் இதைத்தான் நான் செய்வேன்.மாட்டுக்கு மாற்றீடாக எவ்வளவோ நல்ல சமூகத்திட்டம்களை நாம் செய்யலாம் என்பதை மதவெறியர்கள் அறிவார்களா?

Anonymous ,  October 22, 2013 at 11:37 AM  

இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு வழிகோலக் கூடாது...! அரசியல் தூரநோக்கு அவசியம்!! -செய்யது ஹுஸைன்

(( சிறிய தவறொன்று நிகழ்ந்துள்ளது. இத்தலப்புக்குக்கீழ் இருக்கும் இந்த கருத்தை தயவுகூர்ந்து நீக்கிவிடவும் ))


" பல்லின சமூகம் வாழும் ஒரு மண்ணில் அடுத்தவர்களின் உணர்வுகளை மதிப்பதும், மதம் சார்ந்த பண்புகளில் ஒன்றாகும்.பேரினவாத அரசுயல் இன்று இனங்களை மோதவிட்டு அரசியல் லாபமீட்டிக்கொன்றுக்கும் இவ்வேளையில் மதவாதிகள் சூலலறிவுடன் நடந்து கொள்வது அவசியமாகும். இவ்வாறு சிந்திப்பது மதவிரோதமல்ல. மத உரிமை என்பது மனித உரிமை என்பதை மனதில் கொண்டு நடந்து கொள்வது ஒன்றும் இறைவனுக்கு எதிரானதல்ல.மாட்டை புனித விலங்காகக் கருதும் மக்கள் சமூகம் வாழும் ஒரு மண்ணில் இதைத்தான் நான் செய்வேன்.மாட்டுக்கு மாற்றீடாக எவ்வளவோ நல்ல சமூகத்திட்டம்களை நாம் செய்யலாம் என்பதை மதவெறியர்கள் அறிவார்களா? "

மௌலானா!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com