Thursday, October 31, 2013

மன்மோகன் சிங் கொழும்பு வருவது உறுதி!! ஜயோ பூச்சாண்டி காட்டுகின்றார் கருணாநிதி!!

கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற பொது நலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் விரும்புவதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. அயல்நாட்டுடன் தொடர்பில் இருப்பது இந்தியாவின் கேந்திர நலனுக்கு முக்கியமானது என்பதைக் கருத்தில் கொண்டே இவர் இந்த தீர்மானத்தை எடுத்துள் ளதாக அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய கட்சியின் மத்திய குழுவுடன் பேசிய பின் இலங்கைக்கு வரும் தீர்மானம் கூடுதல் வலுப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு அப்பால் இலங்கை அரசாங்கத்துடன் முக்கிய செல்வாக்கை பேணுவதற்கு பிரதமர் கூடுதல் முக்கியத் துவம் கொடுத்துள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கத்துடன் தொடர்புகளை வைத்திருப்பதன் மூலமே இலங்கை அரசாங்கத்தின் நடத்தை மீது செல்வாக்கு செலுத்தவும் இதன் மூலம் தமிழர்களுக்கு நன்மை செய்யவும் முடியுமென இந்திய அரசாங்கம் சிந்திக்கின்றது. மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை வராதிருப்பது இலங்கையை அவமதிப்பதாக கருதப்பட்டு இந்தியாவின் நல்லெண்ணத்தை கடுமையாக பாதிக்கலாமென இந்திய அரசாங்கம் கருதுகிறது.

இலங்கை அரசாங்கம் சீனா எனும் துரும்பு சீட்டை காட்டியுள்ளது. மாலைதீவுடன் நெருக்கடி தொடர்வதனால் கொழும்புடனான தொடர்பு மோசமடைவதை இந்திய விரும்பமாட்டாது என்றும் த ரைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு, இந்தி யாவைச் சார்ந்த துரும்புகூட செல்லக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள கருணாநிதி, அம்மாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டால், அதனுடைய விளைவுகளை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு தொடர்பாக, சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள முடிவெடுத்திருப்பது என நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர் நிலைக் குழுவில் முடிவு எடுத்திருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது குறித்து கேட்கிறீர்கள்.

தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வு படைத்த எல்லா கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு பிரதமர் செல்லக் கூடாது என்று வலியுறு த்திக்கூறியும் கூட, பத்திரிகைகளில் இன்றுவந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது பிரதமர் செல்லக் கூடுமென்று யூகிக்கக் கூடிய வகையில் உள்ளது. அப்படி, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், அதனுடைய விளைவு களை அவர்கள் சார்ந்துள்ள கட்சியே அனுபவிக்க நேரும்' என்று காங்கிரஸுக்கு எச்சரித்தார்.

பிரதமருக்குப் பதிலாக வேறு யாராவது இந்தியா சார்பில் அந்த மாநாட்டில் கலந்துகொண்டால், உங்களது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, 'இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்றால், இந்தியாவைச் சார்ந்த துரும்பு கூட இந்த மாநாட்டிற்குச் செல்லக் கூடாது என்று தான் பொருள்' என்றார்.

தமிழக சட்டப் பேரவையில் காமன்வெல்த் மாநாடு தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ஆதரித்த நிலையில், மத்தியில் மாறுபட்டு காணப்படுவது குறித்த கேள்விக்கு, 'வினை விதைத்தவர்கள், வினை அறுப்பார்கள்' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மை என்ன என்று மக்கள் சற்று சிந்தித்தால், இந்த கருணாநிதியின் சுய நல சூழ்ச்சியை மிக தெளிவாக புரிந்துகொள்ளலாம். இவரின் இப்போதைய முடிவு, இறந்தகலத்தில் தமிழ் இனம் பட்டதுன்பங்களுக்காக அல்ல. வரப்போகிற பாராளுமன்ற தேர்தலை மையபடுத்தி மட்டுமே.

இலங்கையில் எல்.ரி.ரி.ஈ அழிக்கப்பட்ட காலதில், இவர் முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் இந்திய மண்ணின் அமைதியை குலைத்து, பல தொடர்வண் டிகளை கவிழ்த்து, தமிழ் நாடே கொந்தளிக்கறது எனும்படியாக மிகக் சிறப்பாக கேவலம் கெட்ட அரசியல் செய்து அபடபாவிகளை பலிக்கடாவாக்கியிருப்பார் என்பது உண்மை.

5 comments :

Anonymous ,  October 31, 2013 at 2:52 PM  

எங்களைப் பொறுத்தளவில் 98% வீத நாடுகள் பங்கு பற்றும் மகாநாட்டுக்கு ஓரிருவர் மட்டும் பங்குபற்றாமல் ஒதுங்குவது புத்திசாலித்தனமல்ல.

எனவே நாமும் பங்கு பற்றி, சந்தர்பங்களை பாவித்து மற்றைய நாட்டு தலைவர்களுடன் கதைத்து, எமது பிரச்சனைகளை விளக்கி எமது காரியங்களை புத்திசாலித்தனமாக சாதிப்பதே சிறந்தது.

அதைவிட்டு ஒதுங்கி இருப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.
Who cares us?

மற்றைய நாடுகளுக்கு எம்மையும் தெரியாது எமது பிரச்சனையும் தெரியாது போகலாம்.

அத்துடன், ஒருவரும் எங்களை காணவில்லை என்று தேடவும், சிந்திக்கவு ம் போவதில்லை.
நாம் என்ன அவர்களின் கூடப் பிறப்புக்களா? அல்லது அவர்களின் சம்பந்திகளா?

நன்றாக யோசித்துப் பார்க்கவேண்டும்.

எங்கள் எல்லோருக்கும் குறுகிய சிந்தனையை விட்டு, தெளிவான ஒரு பரந்த சிந்தனை கட்டாய தேவையாகிறது.

எனவே, தயவு செய்து எமது முதலமைச்சரும், இந்திய பிரதமரும் கட்டாயம் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டு ஒரு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்.

எமக்கு சாக்கடை அரசியல் இனியும் வேண்டாம்.

Anonymous ,  October 31, 2013 at 3:54 PM  

It is obvious that T/Nadu cannot decide the foreign policy of the Whole indian Delhi Government.

Anonymous ,  October 31, 2013 at 9:45 PM  

When India wants to have a regional power in Asia,should thay have to partact on Chohm in Sri Lanka.

This is a natural only, otherwice China will take over - all Asia.

Our S.L president knows,what thay do,how thay do.

Please dont mixt those LTTE diasporas here, becouse thay all are terrorists. Including some politiciens in Tamil nadu - India, like Seeman, Y.KO, Kasi Ananthan, Nedumaran, Ramadas, Thirumavalavan, Sathiyaraj and ect,(kalaigar???) where thay are interested to start again terror activities in Sri Lanka.

Anonymous ,  November 1, 2013 at 10:44 AM  

cinema world cannot be compared to politics.True politics is a different matter from cinema.It needs sense,good humour ,humility diplomacy,mutual understandings and
flexiblity.Movie is just a result of
an imagination.Politics is not an imagination at all

Anonymous ,  November 1, 2013 at 1:52 PM  

Rhyming slang era is almost over.This is a new era, with developed minds.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com