வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமானம்! (படங்கள்)
வடக்கு மாகாண சபை தேர்தலில் உறுப்பினர்களாக தெரி வானவர்கள் இன்று காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். முன்னதாக காலை 8.30 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுகளை தொடர்ந்து பாராளு மன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் சபை உறுப்பினர்கள் மங்கள வாத்தியங்களுடன் வீரசிங்கம் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் 9.30 மணியளவில் சமயதலைவர்கள், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாகாண சபை உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
பின்னர் தமது நியமன பத்திரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையில் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்ட பின்னர் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தமது நியமன பத்திரங்களை ஒப்படைத்தனர்.
அதற்கமைய வடமாகாணசபையின் தவிசாளராக, தமிழரசுக் கட்சியை சேர்ந்த சீ வீ கே சிவஞானம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சபையின் பிரதி தவிசாளராக தமிழரசுக் கட்சியின் என்டன் ஜெயநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதற்கமைய முதலமைச்சர் சீ வீ விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண அமைச்சரவையில் வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல்த்துறை அமைச்சராக ஈ பீ ஆர் எல் எப்சை சேர்ந்த பீ ஐங்கரநேசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கல்வி, கலாசார அமைச்சராக தமிழரசுக் கட்சியின் சீ குருகுலராஜனும், சுகாதார அமைச்சராக தமிழரசுக் கட்சியை சேர்ந்த வைத்தியக் கலாநிதி, பீ சத்தியலிங்கமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சராக, டெலோ அமைப்பின் டெனீஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதற்கமைய இவர்கள் அனைவரும் இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ வீ விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர்..
0 comments :
Post a Comment