Sunday, October 6, 2013

மதுபான வடிசாலைகளை நடாத்திச் செல்வதற்கே பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள்.

மதுபான வடிசாலைகளையும், மதுபான நிலையங்களை யும் சொந்தமாக வைத்திருப்பவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டால், அவர்கள் நாட்டை ஒளிமயமான எதிர் காலத்தை நோக்கி முன்னோக்கிச் செல்வதற்குப் மாறாக நாட்டை ஊழல் நிறைந்ததாக பின் நோக்கி இட்டுச் செல்வார்கள் என்று அகில இலங்கை மது ஒழிப்பு இயக்கத்தின் தலைவரான வண. மாதுலுவேவ சோபித தேரர் எச்சரித்துள்ளார். உலக மது ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு இலங்கை பௌத்த காங்கிரஸ் வளவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறுயுள்ளார்.

அரசாங்கத்தின் ‘மதுவுக்கு முற்றுப் புள்ளி’ என்ற எண்ணக்கருவை யாரும் லட்சியம் செய்வதில்லை, மக்களும் நடைமுறைப்படுத்துவதில்லை. கண்டியில் தலதா மாளிகையின் அருகில் ஒன்பது தவறணைகளும் மதுபானக் கடைகளும் இருப்பதக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றை அகற்ற அரசாங்க அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்கவில்லை. புகைத்தல் மற்றும் மது அருந்துதல் காரணமாக ஆண்டுக்கு 20,000 பேருக்கு மேல் இலங்கையில் மரணமடைகின்றனர். இது பயங்கரவாதத்தை விட மோசமான நிலையாகும்.

இது தொடர்பில் தான் ஜனாதிபதிக்கு போரிக்கை மனுவொன்று அனுப்பவிருப்பதாகக் கூறிய சோபித தேரர் புகைத்தல் உடல் நலத்துக்கு மிகவும் கேடானது என்று வெளிநாட்டுச் சிகரட் பெட்டியொன்றில் குறிப்பிட்டிருப்பதைக் காட்டி இலங்கை இவ்வாறு தெளிவான எச்சரிக்கையை சிகரட் பெட்டிகளில் பொறிப்பதற்குத் தவறியுள்ளதென்று குறிப்பிட்டுள்ளார்.

1 comments :

Anonymous ,  October 6, 2013 at 9:50 PM  

This is correct. People from Sri Lanka, drinking much alchohol and smoking much.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com