Friday, October 11, 2013

ஸ்னோடெனைத் தேடி ரஷ்யா சென்ற தந்தை!

அமெரிக்கா பிற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் உலகிற்குத் தெரிவித்தவர் எட்வர்ட் ஸ்னோடென் ஆனால் அமெரிக்க அரசால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய அவர் அடைக்கலம் தேடி பல நாடுகளுக்கும் சென்றார் இறுதியில் ரஷ்யா விமான நிலையத்தில் ஒரு மாதம் காத்திருந்த பின் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அரசின் தற்காலிக அனுமதி கிடைத்து ரஷ்யாவிற்குள் சென்ற ஸ்னோடென் பற்றிய தகவல் பின்னர் வெளிவரவில்லை என்பதுடன் அவரின் இருப்பிடத்தை அறிவதற்கும், வாய்ப்பு கிடைத்தால் அவரைப் பார்ப்பதற்கும் எண்ணி அவரின் தந்தை லோன் ஸ்னோடென் ரஷ்யா சென்றுள்ளார்.

நியூயார்க்கிலிருந்து புறப்பட்டு இன்று அதிகாலை ரஷ்யாவின் ஷெரேமெட்எவோ விமான நிலையத்தை அவர் அடைந்தார். அங்குதான் ரஷ்யாவின் அனுமதி பெறும்முன் ஸ்னோடென் காத்திருந்தார்.

காத்திருந்த நேரத்தில் கிடைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிய லோன் தனது 30 வயது மகன் இருக்கும் இடம்தெரியாது என்று குறிப்பிட்டார் மேலும் தனது மகனின் வழக்கறிஞரான அனடோலி குச்சரேனாவுடன் இணைந்து மகனுடைய நிலைமை, ஆரோக்கியம், தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com