எதிர்கட்சியினரின் சதி! கெசினோ சூதாட்டம் சிறந்ததென நான் தெரிவிக்கவில்லை! எஸ்.பி
கெசினோ சூதாட்ட வர்த்தகமானது மிகச் சிறந்தது என நான் தெரிவித்ததாக வெளியான செய்தி முற்றிலும் சேடிக்கப் பட்ட உண்மைக்கு புறம்பானது செய்தி எனவும் எதிர்கட்சி யினரின் சதியால் ஊடகங்கள் தவறாக இவ்வாறு செய்தி யினை பிரசுரித்துள்ளன என உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த உயர்கல்வி அமைச்சர் ஏனைய சூதாட்ட விளையாட்டுக்களுடன் ஒப்பிடுகையில் கெசினோவில் பாரிய பாதிப்புக்கள் இல்லை என்று கூறினேனே தவிர கெசினோ சூதாட்டமானது சிறந்தது என தெரிவிக்கவில்லை என அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க தெரிவித்தார்.
கெசினோ சூதாட்டதானது சிறந்தது என்பதோடு நானும் கெசினோ விளையாட்டுக் களில் ஈடுப்பட்டுள்ளேன் என உயர் கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment