Tuesday, October 29, 2013

தமிழ் மக்களின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது!

கடந்த சுமார் 110 வருட காலமாக தமிழ் மக்களிடமிருந்த அதிகாரப்பகிர்வு என்ற கனவு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நனவாக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வியமைச்சர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிரந்தர சமாதானத்துடன் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்ற தமிழ் மக்களது கனவு தொடர்பாக அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் நடவடிக் கைகளும் கடந்த காலங்களில் தோல்வியடை ந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் நடைபெற்ற கலை கலாசார விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். உபவேந்தர் கலாநிதி கிட்ணர் கோவிந்தராஜா உள்ளிட்ட பலர் ,இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க ,இங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் ,இலங்கை வரலாற்றில் காலத்திற்குக் காலம் ,இனப்பிரச்சினைத் தீர்விற்காக செய்துகொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள்,இனவாத சக்திகளின் நடவடிக் கைகளினால் கிழித்து வீசப்பட்டன. ,இதனால் தமிழ் மக்கள் விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டனர்.

அதன் ஒரு கட்டமாக, 1987இல் ,இந்தியாவின் தலையீடு காணப்பட்டதுடன் புதிய ஒப்பந்தமொன்றும் எழுதப்பட்டது. அதற்கிணங்க வடக்கு கிழக்கு மாகாணங்கள் ,இணைக்கப்பட்டு மாகாண சபைக்கான தேர்தலும் நடாத்தப்பட்டது. அதனையடுத்து முதலமைச்சர் வரதராஜப் பெருமாளிடம் நிருவாகப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த வேளையில், அதே ஐ. தே. கட்சியின் ஆர். பிரேமதாஸ ஜனாதிபதியாகப் பதவி பெற்றதும் ,இந்திய இராணுவத்தை வெளியேற்றினார். எல். ரீ. ரீ. ஈ. யினரைப் போல மாகாண சபை மூலமான நிருவாகப் பகிர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். பிரபாகரனுடன் உறவை ஏற்படுத்தி 900 மில்லியன் ரூபா பணத்தை மத்திய வங்கியினூடாக வழங்கியதுடன் ஆயுதங்களையும் எல். ரீ. ரீ. ஈ. யினருக்கு வழங்கினார். மாகாண சபை உறுப்பினர்களை கொலை செய்யத் தூண்டினார். நிருவாக முறையினைச் சிதைத்தார். ஆனால், தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வட மாகாணத்திற்கு நீதியான நியாயமான தேர்தலை நடாத்தினார்.

அவ்வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்பட்டமான ,இனவாதத்தைப் பேசியது. நீங்கள் வாக்களிப்பது சிங்களவருக்கா தமிழருக்கா? எனக் கோஷம் எழுப்பியது. எவ்வாறிருப்பினும் நீதியான தேர்தல் மூலம் நிருவாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.அந்த வகையில், 110 வருடகால தமிழ் மக்களது கனவு தற்போது நனவாக்கப்பட்டுள்ளது. நிரந்தர சமாதானம், நிருவாகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ,இணக்கத்தை ஏற்படுத்தி செயற்படுவதன் மூலம் தமது மக்களது அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com