Sunday, October 20, 2013

ஈபிஆர்எல்எப் கட்சிக்குள் குத்து வெட்டு! வெருட்ட வெளிக்கிட்டு வெருண்டு போய் நிற்கும் சுரேஸ்- சித்திரன்

வடமாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற முதலா வது வடமாகாணசபைத் தேர்தலானது, தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற போதும் தமிழ் மக்களின் அரசியல் தோல்விக்கும் அது காரணமாக அமைந்து விட்டதாகவே பலரும் கருதுகின்றனர். தேர்தலின் பின்னர் உட்கட்சி மோதல்களும் பங்காளிக் கட்சி மோதல்களும் வலுத்துள்ளதுடன் அரசியல் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பு தலைமையினதும் முதலமைச்சர் விக்கியினதும் செயற்பாடுகள் மத்திய அரசுடனான இணக்க அரசியலை நோக்கி செல்வதை யாரும் மறுத்துவிட முடியாது. விளங்கக் கூடியதாக கூறுவதானால் தற்போது கூட்டமைப்பின் கொள்கையும் செயற்பாடும் ஈபிடியின் கொள்கையுடன் ஒத்துப் போகக்கூடிய மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற நிலைக்கு வந்துவிட்டது. டக்ளஸ் தேவனாந்தா கூட்டமைப்பினுள் உள்வாங்கப்பட்டு பிரதித்தலைவர் பதவி வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இவ்வாறு கூட்டமைப்பு மக்களின் அபிலாசைகளில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ஈபிஆர்எல்எப் கட்சியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. சகோதர பாசத்தால் துடித்த அண்ணன் சுரேஸ் பிறேமச்சந்திரன் தம்பிக்கு அமைச்சுப் பதவி கேட்டார். அதைக் கொடுப்பதற்கு தமிழரசுக் கட்சி இடம்கொடுக்காமையால் தமிழரசுக் கட்சிக்கு மிரட்டல் விடும் செயற்பாட்டில் சுரேஸ் ஈடுபட்டார்.

தனது செல்வாக்கையம் காட்டவேண்டும் எனக் கருதிய சுரேஸ் புளொட், ரெலோ ஆகிய கட்சிகளை இணைத்து சத்தியப்பிரமாண நிகழ்வைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார். இந்த நிலையில் தன்னுடைய இருப்பை பற்றி அன்று தொடக்கம் இன்று வரை யோசித்து வரும் பவுடர் செல்வம் தனது முடிவை மாற்றி சத்தியப்பிரமாண நிகழ்வுக்குச் சென்றிருந்தார். இதனால் ரெலோ இரண்டாக பிளவுபட்டது.

இது இரண்டாக தானே பிளவுபட்டது. ரெலோ இரண்டாக பிளவுபட்டபோது ஒற்றுமையாக இருந்த புளொட், ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளில் ஈபிஆர்எல்எப் கட்சியின் நிலைதான் கவலைக்குரியதாக மோசமாகிவிட்டது.

பாவம் தான். மக்கள் என்ன செய்வார்கள். நடைபெற்று முடிந்த தேர்தலில் ஈபிஆர்எல்எப் சார்பாக போட்டியிட்டவர்களில் யாழில் 2 பேரும் முல்லைத்தீவில் 2 பேரும் வவுனியாவில் 2 பேரும் என 6 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டது. ஆனால் அதில் எத்தனை உறுப்பினர்கள் தற்போது ஈபிஆர்எல்எப் கட்சியுடன் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சர்களை நியமித்தல் தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டபோது தமிழரசுக் கட்சி ஈபிஆர்எல்எப் சார்பாக யாழில் போட்டியிட்ட ஜங்கரநேசனுக்கு அமைச்சுப் பதவியை வழங்கியது. இதனையடுத்து ஜங்கரநேசன் ஈபிஆர்எல்எப் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஈபிஆர்எல்எப் கட்சியின் 6 வடமாகாணசபை உறுப்பினர்களில் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதல் 5 ஆக குறைந்தது. தம்பிக்காக செய்த கூத்து அது. சூழலியலாளரான ஜங்கரநேசன் ஈபிஆர்எல்எப் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர். சுரேஸ்சுக்கு மிக நெருக்கமானவர். இதன் காரணமாகவே தேர்தலில் ஈபிஆர்எல்எப் சார்பாக போட்டியிட்டார். தேர்தல் பரப்புரைகளின் போது சுரேஸ் ஜங்கரநேசனை புறந்தள்ளி தனது தம்பி சர்வேஸ்வரனை முன்னிலைப்படுத்த முயன்றுள்ளதுடன் தனது தம்பிக்கு அமைச்சு பதவி ஒன்றை பெறுவது தொடர்பாகவும் தமிழரசுக் கட்சியுடன் பேசிக் கொண்டார்.

இது தொடர்பாக ஜங்கரநேசனுக்கு தெரியவந்ததும் இருவருக்குமிடையில் இடைவெளி ஏற்படத் தொடங்கியது. அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய தமிழரசுக் கட்சி ஜங்கரநேசனை ஆதரித்ததுடன் அவருக்கும் ஈபிஆர்எல்எப் கட்சிக்குரிய அமைச்சை வழங்குவதாக அறிவித்தது. இவ் அமைச்சுப் பதவியை பெறவேண்டாம் என சுரேஸ் தரப்பால் ஜங்கரநேசனுக்கு அறிவுறுத்தப்பட்டபோதும் தனது கட்சி தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட அவர் மறுத்ததர். இதனால் கட்சியில் இருந்து வெளியில் வந்தார்.

இச் சந்தர்ப்பத்தில் தமிழரசுக் கட்சி பங்காளி கட்சித் தலைவர்களின் முடிவு இன்றி அமைச்சு நியமனம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஆர்எல்எப் 5 உறுப்பினர்களும் ரெலோ 2 உறுப்பினர்களும் புளொட் 2 உறுப்பினர்களும் ஆக 9 உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணத்தை நிகழ்வை பகிஸ்கரிப்பதாக அறிவித்ததுடன், முள்ளிய வாய்காலில் 9 பேரும் சத்திய பிரமாணம் செய்வதாகவும் தீர்மானித்தனர். முள்ளியவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்வதன் மூலம் மக்களின் நன்மதிப்பை பெறலாம் என 9 உறுப்பினர்களும் பங்காளி கட்சிகளும் கருதின. முள்ளிவாய்காலிலை காட்டி எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும். முள்ளிவாய்க்கால் என்பது ஒன்றும் புலிகள் மக்களுக்கு கொடுத்த பரிசு. அது புலிகளின் கர்வம் அடக்கப்பட்ட இடம் அல்லது புலி்களின் அகோரப்பிடியிலிருந்து தமிழ் மக்கள் மீட்க்கப்பட்ட இடம் என்ற வரலாற்று உண்மையை மக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் வெகுவிரைவில் இல்லை.

குழப்பம் ஏற்படும் வரை மௌனம் காத்த மன்னார் ஆயர் முள்ளியவாய்க்கால் சத்திய பிரமாணத்தை தடுத்தார். கட்சிகளுக்கிடையில் பிரச்சனை ஏற்படுவதைத் தடுத்து ஜக்கியத்தை ஏற்படுத்த அதைச் செய்தவராம். அமைச்சு பதவிக்காய் சண்டை பிடிச்சு சத்தியப் பிரமாணத்தை புறக்கணிப்பதாக அவர்கள் அறிக்கை வெளியிட்டு ஊடகங்களில் வந்த போது அவருக்குத் தெரியாதா? அல்லது அவரும் பத்திரிகைகளை முழுசாக வாசிப்பது இல்லை போலும். (அதாவது கிணற்று தவளை அல்லது சுத்த சூனியம் என்று சொல்லுவோமே) பதவிப்பிரமாண நிகழ்வுக்கு போனபோது கூட அவருக்குத் தெரியாதா? என்னய்யா பம்மாத்து. மத தலைவர் என்று பார்த்தா அவரும் பம்மாத்து தான்.

அது வரை பலமாக இருந்த ஈபிஆர்எல்எப் மீளவும் உடைவுறத் தொடங்கியது மன்னார் ஆயரின் கருத்துக்குப் பிறகு தான். மன்னார் ஆயர் சொன்னதும் ஈபிஆர்எல்எப் எம்.பி சிவசக்தி ஆனந்தன் முள்ளியவாய்க்கால் சத்தியப்பிரமாண நிகழ்வை நிறுத்துவதாக அறிவித்தார். ஆனால் சொன்னபடி ரெலோ சிவாஜிலிங்கம் முள்ளியவாய்க்காலில் பதவிப்பிரமாணம் செய்தார். புளொட் யாழ்பாணத்தில ஒரு மூலைக்கே சைலன்டா செய்திட்டினம். அது சரி இராணுவத்தோட சேர்ந்து முள்ளியவாய்க்கால் கொலையை செய்திட்டு அவர்கள் எப்படி முள்ளியவாய்க்கால் போக முடியும்?

ஏற்கனவே ஜங்கரநேசன் ஈபிஆர்எல்எப் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஈபிஆர்எல்எப் கட்சியின் முல்லை மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் தனது கட்சித் தலைமைகளை உதறித்தள்ளிவிட்டு சிவி.விக்கினேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ரவிகரன் நீண்ட காலமாக முல்லைத்தீவு பிரதேசத்தில் ஈபிஆர்எல்எப் சார்பாகவும் கூட்டமைப்பு சார்பாகவும் போராட்டங்களிலும் ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் அவரை புறந்தள்ளி வைத்தியரும் காசுமிசினுமாகிய சிவமோகனை காசுக்காக முன்னிலைப்படுத்தி முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அமைச்சுப் பதவியை கொடுக்க முனைந்ததால் ரவிகரன் ஈபிஆர்எல்எப் தலைமை மீது அதிருப்தி அடைந்து சிவி.விக்கினேஸ்வரன் முன்னிலையில் கொழும்பில் சத்தியப்பிரமாணம் செய்தார். அது சரி கஸ்டரப்பட்டவனுக்கு கோபம் வரும் தானே.

இவரை தன்ர கட்சில சேர்த்துக்கொள்ள ஒவ்வொரு நாளும் பவுடர் செல்வம் அடைக்கலநாதன் அவரோட தொலைபேசில கதைக்கிறாராம். சிவியிடம் நல்ல பிள்ளை என்ற பெயர் பெற்றதும் செல்வத்தின்ர ஆசையை பாருங்க.

ஈபிஆர்எல்எப் கட்சியில் தேர்தலின் பின் ஜங்கரநேசன், ரவிகரன் ஆகியோர் பிரிந்துள்ள நிலையில் எஞ்சிய நான்கு உறுப்பினர்களுடனும் வவுனியாவில் சத்தியப்பிரமாண நிகழ்வை நடத்த ஈபிஆர்எல்எப் தீர்மானித்தது. அதனடிப்படையில் சட்டத்தரணி தயாபரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் இடம்பெற்ற போது முல்லை மாவட்ட சிவமோகன், யாழ் மாவட்ட சர்வேஸ்வரன், வவுனியா மாவட்ட தியாகராஜா ஆகிய ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களே வருகை தந்தனர்.

வவுனியா மாவட்ட இந்திரராஜா முதலமைச்சரின் காலில தான் போய் விழவேண்டும் என்று அடம்பிடிச்சு வர மறுத்திட்டார். அரசியலுக்கு புதுசா வந்த இவரை இவருடைய உறவினர் ஒருவர் தானாம் அரசியலுக்கு கொண்டு வந்தவர். அவர் முன்னர் ஈபிடிபியுடன் கொழும்பில் சேர்ந்து இயங்கிய போதும் நீண்டகாலமாக ஈபிஆர்எல்எப் இலேயே இருந்துள்ளார்.

அவருடைய சிபார்சில அரசியலில் கால் பதித்த இந்திரராஜா வென்றதும் கட்சிக்கு டாட்டா காட்டிட்டு சிவிக்கு முன்னால் போய் தமிழரசுக்கட்சி உறுப்பினரும் சாமாதான நீதவானுமாகிய குலநாயகத்தின் காலில விழுந்து எழும்பிட்டார். அவர் சத்தியப்பிரமாணம் செய்த வலிமேற்கு பிரதேச சபைக் கட்டடத்திற்க ஈபிஆர்எல்எப் செயலாளர்நாயகம் சுரேஸ்பிறேமச்சந்திரன் நின்ற போதும் அவருக்கு சொல்லாமல் ஒழிச்சு போய் காலில விழுந்திட்டாராம். இப்பவே இப்படி என்றா பிறகு இவர்களை....?

இப்ப ஈபிஆர்எல்எப் கட்சில இருந்து இந்திரராஜாவும் தமிழரசுக் கட்சிக்கு தாவிற ஜடியாவில இறங்கிற்றார். எஞ்சிய மூன்று உறுப்பினர்களுடன் ஈபிஆர்எல்எப் இருக்கிறது. இதில இன்னும் ஒரு விடயத்தை கூற வேண்டம் கட்சில வெறுப்படைந்த மண்டயன் குழு சுரேஸ் வவுனியாவில நடந்த சத்தியபிரமாண நிகழ்வில கலந்து கொள்ளவில்லை. வவுனியாவில் நின்ற போதும் அவர் கலந்து கொள்வில்லை என்றா பாருங்கவன். யாற்ரையன் நிகழ்விலயே புகுந்து அறிக்கை விடுகிற சுரேஸ் தன்ர கட்சின்ர நிகழ்வுக்கு போகவில்லை என்றா பாருங்களன்.

மண்டயன் குழுவாக இருந்து செய்த பாவங்கள் இப்ப தான் சுரேஸ்சை ஆட்கொள்ள தொடங்கிற்று என்று எல்லாரும் கதைக்கிறார்கள். அது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம் தான். ஏன் என்றால் தமிழரசுக் கட்சிக்கு மிரட்டல் விட்டு புறக்கணித்த சுரேஸ் அணி கடைசியாய் தன்ர மூன்று உறுப்பினர்களையும் இழந்து கடசியும் ஜங்கரநேசன் அணி, ரவிகரன் அணி, இந்திரராஜா அணி, சுரேஸ் அணி என்று நான்காக பிரிந்து நிற்கிறது. போற போக்கை பார்க்கும் போது நந்திக்கடல் ஞாபகம் தான் வருகிறது. மண்டயன் குழுத் தலைவரும் அடுத்த தேர்தலில் கோமணத்துடன் நிற்கவேண்டித்தான் வரும் போல..

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com