Monday, October 14, 2013

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு மனித உரிமை மீறல் என்று அர்த்தம் கற்பிக்க வேண்டாம்! நீதியரசர்கள் வழக்கை தள்ளுபடி செய்தனர்!

வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலையடுத்து உயிரிழந்த கைதியான நிமலரூபனின் பெற்றோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதற்கு விளக்கமளித்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரமொன்றை அடக்கும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு மனித உரிமை மீறல் என்று அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்றும் தெரிவித்த பிரதம நீதியரசர், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்கும்போது இவ்வாறான மரணங்கள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான வழக்குகளை தொடர்ந்தும் விசாரிப்பதன் மூலம், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் பிரதம நீதியரசர் குறிப்பிட்டார். எனவே, குறித்த மனுவை தொடர்ந்தும் விசாரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்று தெரிவித்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழு, இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com