Sunday, October 13, 2013

சத்தியப் பிரமாண நிகழ்சிக்கு வராதவர்களை குடைய விருக்கிறார் விக்கினேஸ்வரன்.

வெள்ளிக் கிழமை இடம் பெற்ற சத்திய பிரமாண நிகழ்வுக்கு வருகை தராக புதிய ததேகூ வட மாகாண சபை உறுப்பினர்களிடம் விளக்கம் கோரவுள்ளார் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பாராளுமனறத்தில் மிகப் பெரிய தமிழ்க் கட்சியாகத் திகழும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவு அதிகரித்துள்ளதை சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், சிவாஜிலிங்கம் ஆகியோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

மாகாண சபை உறுப்பினர்கள்தான் மாவட்ட அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். மாகாண சபை அமைச்சர்கள் அல்லர். அமைச்சர்களைத் தெரிவு செய்வது முதலமைச்சரின் வேலை. அவர் மாகாண சபையில் அரசியல் செய்ய வேண்டியதில்லை. அரசியல் செய்யும் இடம் அல்ல மாகாணசபை. மாகாணத்தை அபிவிருத்தி செய்வதுதான் அதன் வேலை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தயவு செய்து பாராளுமன்றத்தில் அரசியல் செய்யட்டும். அதற்கு வசதி இல்லாவிட்டால் தமிழ் நாட்டுக்குச் சென்று அங்கு தமது குடும்பத்தினருடன் இணைந்து அரசியல் செய்யட்டும். பாவம் உங்கள் கட்சிகளின் சார்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் மாகாண சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் பொது வாழ்க்கையை நாசப்படுத்தி ஆனந்த சங்கரியின் நிலைக்கு ஆளாக்கிவிடாதீர்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com