Wednesday, October 23, 2013

செல்போனில் அதிகம் பேசினால் மூளை புற்றுநோய் அபாயம் அதிகம்!

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது முதுமொழி ஆனால் இப்போது `செல்போன் இல்லாதவர்கள் செல்லுபடி யாகமாட்டார்கள்’ என்பது புதுமொழியாக மாறி விட்டது தகவல் பரிமாற்றத்துக்கு உடனே உதவும் சாதனம் செல் போன் என்பதில் இருவேறுபட்ட கருத்துக்கு இடமில்லை.

ஆனால் அதனால் உருவாகும் தொல்லைகள்தான் ஏராளம் என்றால் அதையும் மறுப்பதற்கில்லை ஏன் எனில் செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிடுகின்றனர் இதனால் எங்கு லாபம் அதிகமோ அதை நாடிச்செல்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

செல்போன் நிறுவனங்களின் அறிவிப்புகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு மணிக்கணக்கில் பேசுகிறார்கள் என்பதுடன் அர்த்த ஜாம வேளையிலும் தனது உள்ளம் கவர்ந்த காதலியுடன் மணிக்கணக்கில் பேசுகிறான் அப்படி என்னதான் பேசுவார்களோ? இதுதான் இப்படி என்றால் சிலர் சாலையில் நடந்து செல்லும் போது தனியாக பேசிக்கொண்டு செல்கிறார்கள்.

ஏன் இப்படி தனியாக பேசுகிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றும், உன்னிப்பாக கவனித்தால் தான் அவர்கள் செல்போனில்தான் பேசுகிறார்கள் என்ற உண்மை தெரிய வரும் என்பதுடன் வாண்டுகள் முதல் வாழ்க்கையின் விளிம்பில் உள்ளவர்கள் வரை செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலைதான் நம் நாட்டில் உள்ளது.

தற்போது சாப்பாடு தேவையில்லை எங்களுக்கு செல்போன் இருந்தாலே போதும் என்று கூறுபவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் உலகில் 500 கோடி பேருக்கு செல்போன் இணைப்பு உள்ளது இதில் 60 கோடி இணைப்புகள் இந்தியாவில் உள்ளது இந்த புள்ளி விவரம் எடுத்துக் கூறுவது என்னவென்றால் இன்றைய மனிதனுக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது 500 கோடி மடங்கு கதிர் வீச்சை உள்வாங்கியிருக்கிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை.

காணாமல் போன குருவி, பட்டாம்பூச்சி இனங்களுக்கு செல்போன் கதிர்வீச்சுதான் காரணம் என்று ஆய்வுகள் கூறுவதுடன் வரங்களைக்கூட சாபமாக மாற்றும் திறன் மனிதனுக்கு உண்டு என்பதை நமது வரைமுறையற்ற செல்போன் பேச்சும், அதன்பயனாய் நாம் பெறுகின்ற கதிர் வீச்சுமே மவுன சாட்சி.

மேலும் லட்சம், கோடிகளில் புரளும் வணிகம் என்பதாலோ என்னவோ அதிக கதிர்வீச்சினால் ஏற்படும் உடல், மனநலக்கேடுகளை அறிவியல் உலகம் இன்று வரை அதிகம் பேசுவதில்லை ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு, செல்போன் கதிர்வீச்சு புற்று நோயை உண்டாக்கலாம் என பட்டும் படாமலும் தன் முடிவை அறிவித்துள்ளது.

இதை மீறியும் உலகளவில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட விஞ்ஞானிகள் அபாயச் சங்கை ஊதிக் கொண்டுதான் இருக்கிறார்கள் செல்போன் பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கேட்டால் அதிர்ந்து போவார்கள் இது குறித்து விளக்கம் அளிக்கிறார் ஈஷா ஆரோக்யாவைச் சேர்ந்த டாக்டர் சாட்சி சுரேந்தர் அதனை இங்கு காண்போம்.

* செல்போனை அதிகம் பயன் படுத்துவோருக்கு கவனக் குறைவு, மனச்சோர்வு, மறதி ஏற்படும்.

* படபடப்பு, ஆழ்ந்த தூக்க மின்மை மன உளைச்சல் ஆகியவை சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஓட்டிக் கொள்ளும்.

* தூங்கும் போது கூட ரிங்டோன் அடிக்கிற மாதிரியே ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.

* செல்போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப்புற்று நோய்வர வாய்ப்புளள்ளது.

* செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் இளையதலைமுறையும், குழந்தைகளும் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தும் செல்போன்களை நாம் கட்டாயம் பயன்படுத்தத்தான் வேண்டுமா கடந்த 15 ஆண்டு வரை என்ன செய்தோம் தரைவழி இணைப்புகளை பயன்படுத்தி தானே பேசி வந்தோம் அப்போது தகவல் பரிமாற்றம் நடைபெறவில்லையா?

செல்போனின் கதிர்வீச்சு ஆபத்தை உணர்ந்த வெளி நாட்டவர்கள் இப்போது அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள் மற்ற நேரங்களில் லேண்ட்லைன் இணைப்பையே பயன்படுத்துகிறார்கள் பாதிப்பில் இருந்து அவர்கள் தப்பிக்க பார்க்கிறார்கள் ஆனால் நாம் அழிவைப்பற்றி கவலை இல்லை என்று கூறி கண்மூடித்தனமாய் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறோம்.

இனிமேலாவது அளவாய் பேசி மகிழ்வாய் வாழ்வோம்! கதிர்வீச்சைக் குறைக்கும் வழிமுறைகள்

* கண்டிப்பாக தேவை என்ற சமயத்தில் மட்டுமே செல்போனை உபயோகிக்க வேண்டும். அப்போதும் பேசும் நேரத்தை குறைக்க வேண்டும். முடிந்த வரை எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம்.

* செல்போனை காதோடு காதாக வைத்து பேசும் போது கதிர்வீச்சின் அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது எனவே காதில் பொருத்திக் கொள்ளும் சாதனத்துடன் செல்போனை பயன்படுத்தலாம் அதாவது செல்போனை உடலில் இருந்து தூரத்தில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

* சிக்னல் அதிகம் உள்ள இடங்களில் செல்போனை உபயோகித்தல் கதிர்வீச்சின் ஆபத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது சிக்னல் முழு அளவில் இருக்கும் போது கதிர்வீச்சின் அளவு குறைவாக இருக்கும்.

* கதிர்வீச்சை உள்வாங்கும் தன்மை குறைவாக உள்ள போன்களை கேட்டு வாங்கி உபயோகிக்கலாம்.

* காரில் போகும் போது வெளிப்புற ஆண்டனா இல்லாவிட்டால் செல்போனில் பேசுவதை கண்டிப்பாக தவிக்க வேண்டும்.

* செல்போன் சார்ஜர் இணைப்பில் இருக்கும் போது எக்காரணம் கொண்டும் அப்படியே எடுத்து பேசக் கூடாது ஏனென்றால் மின் கசிவு ஏற்பட்டு மின் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com