Wednesday, October 2, 2013

தரம் 5 வெட்டுப்புள்ளி விபரம்

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகக்கூடிய வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் குறைந்த வெட்டுப் புள்ளிகளாக 151 வெட்டுப்புள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 156.

மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 155.

அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளி 154.

கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மொனராகலை, முல்லைத்தீவு, இரத்தினபுரி, பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 153.

புத்தளம், திருகோணமலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 152.

அநுராதபுர மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளி 151 ஆகும்.

பாடசாலைகளுக்கான புலமைப் பரிசில் பரீட்வை முடிவுகள் நேற்று (01) அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com