ரணிலுக்கு 46 மணித்தியால காலக்கெடு.
தலைமைத்துவப் பதவியில் இருந்து விலகுவதற்கு இரண்டு நாள் கால அவகாசம் கேட்டுள்ளார் ரணில் விக்கி ரமசிங்க. கொள்ளுப்பிட்டி தர்மகீர்த்தியாராம விகாரையில், தேசிய பிக்கு பெரமுனையின் அறிவுரையாளர் வண. கிரிபே ஆனந்த தேரர் முன்னிலையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தலைவர் பதவியில் இருந்து விகுவதைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என்று தான் கூறிய போது, அவர் அது பற்றி யோசிக்க இரண்டு நாள் அவகாசம் கேட்டதாக கிரிபே ஆனந்த தேர்ர் கூறினார். உத்தேச தலைவரகள் குழுவுக்கும் ரணில் விக்கிரமசிங்க இணங்கியதாக தேர்ர் மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியை, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் யாவரும் ஐக்கியமாக சேர்ந்திருக்கும் தேசியக் கட்சி என்றுதான் 1946 ல் இருந்து இந்நாட்டு மக்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அது சிங்கள-பௌத்த பிக்குகளின் கட்சி என்று இப்போதுதான் தெரிகிறது. மரபாலும் மனதாலும் கிறிஸ்தவனாக இருந்து கொண்டு பதவிக்காக எவ்வளவுதான் பௌத்தனாக நடித்தாலும் பிக்குமார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று இப்போதாவது ரணிலுக்குப் புரிந்திருக்கும். கிறிஸ்தவ சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் அவர்களுக்கு விமோசனம்
0 comments :
Post a Comment