Thursday, October 17, 2013

மொத்தத்தையும் சுருட்டி விட்டார் விக்கி! 13 முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் விக்னேஸ்வரன் கையில்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபையில் 13 முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப் பட்டுள்ளன.

அதற்கிணங்க வட மாகாண சபையின் நிதி திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் கட்டுமாணம், நீர்பாசனம், நுகர்வோர் அபிவிருத்தி, சமூக சேவை மற்றும் புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், தொழில் மற்றும் விவசாய அபிவிருத்தி, சுற்றுலா, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு விநியோக அமைச்சர் பேன்ற அமைச்சுக்ளை சிவி விக்னேஸ்வரன் தன்வசப்படத்தியுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த், டளஸ் அழகப்பெரும, அநுர பிரியதர்ஷன யாப்பா, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



5 comments :

வடக்கான் ,  October 17, 2013 at 4:22 PM  

நடக்கட்டும் நடக்கட்டும்

Anonymous ,  October 17, 2013 at 5:55 PM  

Let Mr.CV be a symbol of unity.Let him be a bridge of gap to reduce or
get rid of the differences that exist
between different races.May he an example for the reunification and not like the past such as "hatred political business" of some selfish minded political leaders.

Anonymous ,  October 17, 2013 at 6:39 PM  

நிதி திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் கட்டுமாணம், நீர்பாசனம், நுகர்வோர் அபிவிருத்தி, சமூக சேவை மற்றும் புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், தொழில் மற்றும் விவசாய அபிவிருத்தி, சுற்றுலா, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு விநியோகம். WOW !

So, the Law, Police and Land all are included. Our Hon.CM has achieved the aim. Kudos!

Anonymous ,  October 17, 2013 at 6:56 PM  

சிங்கதிற்கு சிங்கம் அல்ல அதற்கு மேலே ..
சிந்தனை, அறிவு, ஆற்றல், திறமை படைத்த எங்கள் கௌரவ நீதிமான் விக்கி ஐயா.

அவரே எங்கள் உண்மையான, வணக்கத்திற்குரிய பெரும் தலைவர்.

ஈழத் தமிழர், வையகம் எங்கும் புகழ் பெற்று, பெருமையுடன் வாழ அவர் வழி செய்வார்.

Anonymous ,  October 23, 2013 at 12:30 PM  

Why didn't this article let the readers know the fact that each of that subject area which comes under the Chief Minister is allocated to a provincial council member?. In fact almost of the the members have a subject area to look after.

Furthermore under the 13th amendment to the constitution a board of ministers consisting of 4 ministers are allowed. And each of these ministries needed to be allocated subject areas under each portfolio.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com