Wednesday, October 16, 2013

அதி. வண. வெலிகமை ஸ்ரீ ஞானரத்ன தேரோவின் 101 வது பிறந்த நாளில் அவரைச் சந்தித்து வாழ்த்தினார் ஜனாதிபதி.

இரத்மரானை மல்லிகாராமை விகாரையின் தலைமைக் குரு ராஜகிய பண்டித், வினய விசாரத தர்மகீர்த்தி, அதி. வண. வெலிகமை ஸ்ரீ ஞானரத்ன தேரோவின் 101 வது பிறந்த நாளான அக்டோபர் 14 ம் திகதி ஜனாதிபதி அவரின் விகாரைக்குச் சென்று அவருக்கு நீடிய ஆயுளும் நல்ல சுகமும் கிடைக்க வாழ்த்தியுள்ளார். நாயக்க தேரருடன் சிறிய கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார். தேரரின் பிறந்த நாளையொட்டி அந்த விகாரையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த பல பிங்கம நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட ஜனாதிபதி அங்கிருந்த பக்தர்களுடனும் அளவளாவினார்.

அத்துடன் அந்த தேவாலய வளவில் நிறுவப்பட்ட வெள்ளி முலாம் பூசப்பட்ட வண. ஞானரத்ன தேரரின் உருச் சிலையையும் திரை நீக்கம் செய்து வைத்தார். விகாரையின் தாயக்க சபையினால் ஈற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் மகா சங்கத்தினரும் சுற்றயலில் உள்ள பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர். நாயக்க தேரர் ஜனாதிபதியை ஆசீர்வதித்தார்.

அத்துடன் ஜனாதிபதி முன்னாள் ஆயுள்வேத ஆணையாளர் மருத்துக் கலாநிதி உபாலி பிலபிட்டியாவின் வதிவிடமான வெத மெதுரவுக்குச் சென்று அவரின் சுகநலத்தைப் பற்றிக் கேட்டறிந்தார். அவருடன் சிநேனபூர்வமான கலந்துரையாடலுக்குப் பின்னர் அங்கு அமைந்திருந்த மருத்துவத் தாவரத் தோட்டதையும் பார்வையிட்டார் ஜனாதிபதி.

ஜனக்க அழகப்பெரும

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com