வடமாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் - Tamil for Obama
தமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களிடம் விக்னேஷ்வரன் மன்னிப்பை கேட்கும் வரை, தமிழ் நாட்டு முதலமை ச்சர் ஜயலலிதா ஜயராம் வடமாகாண முதலமை ச்சராக தெரிவாகியுள்ள சீ.வி.விக்னேஷ்வரனுடன் எந்த வித மான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளக்கூடாது என, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு வலியுறுத்தியு ள்ளது.
இலங்கையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு தமிழ் நாட்டினதோ அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களதோ ஒத்துழைப்பு அவசியம் இல்லை என்று சி.வி.விக்னேஷ்வரன் ஏற்கனவே கூறியிருந்தமையை அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளதுடன், வடமாகாணத்தில் வாழ்கின்றவர்கள் தமிழ் நாட்டு தமிழ் மக்களின் உறவினர்கள் என்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் முதலமைச்சராக தெரிவாகியுள்ள விக்னேஷ்வரன் இந்த அடிப்படை கொள்கையை நிராகரிக்கும் வகையில் வெளியிட்டுள்ள கருத்தை அந்த அமைப்பு கண்டித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அமெரிக்க ஜனாதிபதி பெரக் ஒபாமாவுக்கு தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தனர். இதனடிப்படை Tamil for Obama என்ற அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
4 comments :
நடந்து முடிந்த வடமகாணத்தேர்தலை, வடமாகாண வாக்காளப்பெருமக்கள் பகிஸ்கரிக்காமல், மிகவும் ஆர்வமுடன் பங்கு பற்றியதை அவர்களால் பொருக்க முடியவில்லை.
Obama porukkiyal,Kasi Ananthan porukki ellaarum omatta porukkungo/Tamil naattu kaaranitta porukkungo!
Sri Lanka makkalukku - Sri Lanka, ippadi patta porukkiyalukku alla.
அந்த புலன் பெயர் ஓநாய் கூட்டங்கள், தமிழ் மக்களின் .
பிணங்களை வைத்து பணம் தேடி பழக்கப்பட்டு விட்டது. தற்போது இங்கு புலிகளும் இல்லை, பிணங்களும் இல்லை எனவே அதுகளுக்கு பிளைப்புக்களும் இல்லை.
எனவே இப்போ தமிழ் நாட்டு மக்களையும், தாயக மக்களையும் பிளவு படுத்தி அதில் ஏதாவது பிணங்களை காணலாம் என்று பகல் கனவு காணுதுகள் அந்த ஓநாய்கள்.
"தமிழ் நாட்டினதோ அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களதோ ஒத்துழைப்பு அவசியம் இல்லை"
அப்படி ஒரு அபிப்பிராயம் ஏற்கனவே மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஏனனில் அப்பாவி மக்களை புலிகள் தங்களின் பாதுகாப்பு அரணாக பாவித்து, பல ஆயிரம் தமிழ் உயிர்களையும், உடமைகளையும் அழித்து நாசம் செய்வதற்கு துணை போனவர்கள்,
பின்னர் எல்லாவற்றையும் இழந்த மக்கள் அகதிகளாக, அனாதைகளாக கையேநதி நிற்கும் போதும்ம் கூட, ஒரு நேர உணவோ, தண்ணீரோ கொடுத்து ஆறுதல் அளிக்க முன் வராதவர்கள்,
இப்போ, ஏன் எங்களின் வாழ்க்கையில் தலையிட வேண்டும்???
Post a Comment