Monday, September 30, 2013

வடக்கிற்கு அதிகாரங்கள் வழங்கப்படாதுவிட்டால் மற்றையதை நாங்கள் ஜெனீவாவில் பார்த்துக் கொள்வோம்! முஸ்லிம் காங்கிரஸ்

வட மாகாண சபைக்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிடுகிறது.

காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி, உதயன் பத்திரிகையுடனான நேர்காணலில் குறிப்பிடும் போது, அவ் வாறு அதிகாரங்கள் வழங்கப்படாதவிடத்து அரசு சர்வதே சத்திற்கு முகங்கொடுக்க வேண்டிவரும் எனக் குறிப்பிட்டு ள்ளார்.

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரிய வெற்றியை சுவீகரித்துக் கொண்டிருப்பதால் அவர்களின் அதிகாரத்தை நிலைநாட்டும் பொருட்டு சகல உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடும் அவர், அரசாங்கம் அதனை விட்டு மெல்ல விலகிச் செல்வதானது எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஜெனீவா மாநாட்டில் அதற்குப் பதிலளிக்க வேண்டிவருமே என்ற எண்ணத்தினால்தான் எனவும் சுட்டிக் காட்டுகின்றார்.

புலிகள் ஆயுதங்கள் தாங்கி, அந்த பலத்துடன் யுத்தம் செய்தது. தற்போது ஜனநாயக சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டுள்ள மக்களுக்கு அதிகாரத்தை வழங்காமலிருப்பது பெரும் பிரச்சினைக்குரியது எனவும், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியது போல, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு ஆயத்தமாக வேண்டாம் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுள்ளார்.

(கேஎப்)

4 comments :

கரன் ,  September 30, 2013 at 8:04 PM  

காத்து ரிஎன்ஏ பக்கம் அடிக்குது. பிறகென்ன தொப்பி அந்தப்பக்கம்தானே பெரளும்.

Anonymous ,  September 30, 2013 at 9:30 PM  

ஐயா aம்பி கரன் TNA பக்கம் புயல் அடிக்கும் போது கூட வடமாகாணத்திற்கு அதிகாரம் வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அதிலும் ஆளும்கட்சியோடு இருந்துகொண்டே முதலில் கேட்டவர்கள் SLMC காரர்கள் தான் என்பது உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ?
சான் ஏறும்போதே உங்கள் மனம் இப்படி குதருகிறதே நீங்கள் முலம் ஏறிவிட்டால் என்னபாடு உங்கள் நிலைமை எவ்வாறு இருக்கும்?

மல்லையூரான் ,  September 30, 2013 at 9:37 PM  

ஷரியாவையும் மாற்றுவரர்கள்

Anonymous ,  September 30, 2013 at 11:52 PM  

தமிழ் முஸ்லிம் மக்கள் மதத்தால் வேறு பட்டாலும், இலங்கையில் மொழியாலும், சிறுபான்மை இனத்தாலும் தமிழர்களோடு ஒன்று பட்டவர்களே. வட மாகாணம் மட்டுமல்ல கிழக்கு மாகாணமும் மகிந்த அரசாங்கந்தால் நசுக்கப்படுகின்றது. அதை சுயநல கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் கண்ண்டுகொள்ளாத போதும், ஒரு சில பொதுநலவாத அரசியல் வாதிகளின் நேர்மையான கூற்றுக்களை நாம் எல்லோரும் மதிக்க வேண்டும்.
உதாரணமாக, வடக்கு, கிழக்கு மாகாணம் என்றில்லாவிடின், இலங்கையில் சகல சிங்கள பெருன்பான்மை மாகாணங்களுக்கும் ஜனநாயக ரீதியில் அவர்களின் கோரிக்கைகள், வேண்டுகோள்களை மகிந்த அரசாங்கம் கட்டாயம் செவிமடித்து, எல்லா அதிகாரங்களையும் தாமதமின்றி கொடுக்கும் அல்லவா. ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணம் என்றால் எல்லாவற்றுக்கும் அலட்சியமாக நடப்பதற்கு முக்கிய காரணம் நாம் எல்லோரும் சிறுபான்மை இனத்தவர்கள் எனபதே.

ஆகவே, சிறுபான்மை மக்களாகிய நாம் எமக்குள் மிக ஒற்றுமையாகவும், சகோதரமனதுடன் ஒருவருக்கு ஒருவர் தோள்கொடுத்து உதவியாக நிற்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com