Wednesday, September 25, 2013

நவிபிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று ஐ.நா வில் சமர்ப்பிக்கப்படும்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் இலங்கை தொடர்பான பரிந்து ரைகள் உள்ளடக்கிய அறிக்கை, ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அண்மையில் நவனீதம் பிள்ளை இலங்கைக்கு மேற் கொண்ட விஜயம் தொடர்பில் அந்த அறிக்கையில் உள்ளட க்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த அறிக்கை மீது இன்றைய தினம் வாக் கெடுப்பு நடைபெற மாட்டாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹானாமஹோ தெரிவிக்கின்றார்.

மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் ஒரு வார கால இலங்கை விஜயத்தின் போது, அவர் நேரில் கண்டவை மற்றும் அரசாங்கம், சிவில் அமைப்புக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர் பெற்றுக்கொண்ட தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் உள்ளடக்கி நவனீதம் பிள்ளை வருடாந்த கருத்தொன்றை முன்வைக்கவுள்ளார். இது அவரின் வருடாந்த கூற்றே தவிர, அவரின் அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதமே முன்வைக்கப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹானாமஹோ தெரிவிக்கின்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com