Thursday, September 12, 2013

சீமானின் போலி வேசம்!! அரசியல் வாழ்க்கைக்கு ஒரு வேசமும் பொக்கட்டை நிறைக்க மற்றொரு வேசமும்!

சிங்கள திரையுலகின் பிரபல நடிகை பூஜா நடிக்கும் "விடியும் முன்" படத்தின் தயாரிப்பு வேலைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அடிக்கடி தமிழர்களு க்காக போசுவது போல் தண்னை காட்டிக்கொள்ளும் இந்திய அரசியல்வாதி சீமானின் தம்பி, பாலாவின் நான் கடவுள் உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்திருந் தாலும், பூஜாவுக்கு வர்த்தக ரீதியாக ஹிட் கொடுத்த படங்கள், சிங்கள படங்கள்தான்.

அஞ்சலிகா, ஆசைமான் பியாபனா, சுவன்ட தெனுன ஜீவித, குச பபா என்று அடுத்தடுத்து சிங்கள் படங்களில் தொடர்ந்து ஹிட் கொடுத்த பூஜா மீண்டும் தமிழுக்கு வரும் படம்தான், 'விடியும் முன்'. பூஜா மீண்டும் தமிழுக்கு வருவது யாருக்கு மகிழ்ச்யை ஏற்படுத்தியுள்ளதோ, இல்லையோ, சீமானுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'சிங்கள கன்னுக்குட்டி வந்துட்டியா .. வா.. வா..' என்று தன்மானத் வாய் நிறைய வரவேற்கப்பட்டார் பூஜா.

சிங்கள யாத்ரீகர்கள், பெண்கள், வயோதிகர்கள், குழந்தைகள் போன்றோர் தமிழகத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானபோது அதற்கு ஆதரவு காட்டிய சீமான் படையணி, சிங்கள திரையுலகின் பிரபல நடிகை பூஜாவுக்கு 'இன்முகம்' காட்டுவது வரவேற்கத்தக்கது.

ஆனால் போலியான வேசம் போட்டு வீரவசனம் கூறும் சீமான் இவ்வாறு செய்வதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம் சீமானின் இரட்டை வேடத்தை! சீமானின் தனது அரசியல் வாழ்க்கையை தக்க வைத்துக கொள்வதற்காக ஒருவேடமும் தனது பொக்கட்டை நிறைத்து கொள்வதற்காக இன்னொரு வேடமும் போடுகின்றார் என்பதற்கு சிறந்த மிகச் சிறிய உதாரணமே இது. இதை இலங்கைத்தமிழர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

தனது சுய இலாபத்திற்காக இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து அதன் மூலம் ஆதரவையும் பணத்தையும் தேடாமல் "தானும் தனது வேலையும்" என்ற மனப்பாங்கில் சீமான் இருந்தால் அது தமிழர்களுக்கு செய்யும் பெரிய உதவி என தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

2 comments :

Anonymous ,  September 15, 2013 at 6:23 PM  

He is not either a politician or a remarkable person,he is just an unwanted person in our politics.

Anonymous ,  September 18, 2013 at 9:20 PM  

Seeman oru tamilina thuroki,pulippennai thirumanam seivathaaka solli, avalai enna seithaan??

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com