மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார் ஷிராணி! ஷிராணிக்கு வெளிநாடு செல்ல தடைவிதித்தது நீதிமன்றம்!
சொத்துக்கள் மற்றும் வளங்கள் தொடர்பான தகவல்களை உரிய வகையில் சமர்பிக்க தவறிய குற்றச்சாட்டில் முன் னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க கொழும்பு மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க இன்று கொழும்பு மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜரா னார்.
பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்குமாறு குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் கோரிக்கையொன்றை முன்வைத்தது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த பிரதி வாதியின் சட்டதரணிகள் மேற்குறித்த குற்றச்சாட்டுக்களை தாங்கள் ஆட்சேபிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து இவ்வழக்கை பெப்ரவரி 10ம் திகதிக்கு ஒத்திவைத்த பிரதம மெஜிஸ்ட்ரேட் ஜிஹான் பிலபிட்டிய அன்றைய தினம் ஆட்சேபனை தொடர்பான விடயம் தொடர்பாக ஆராய்வதாக தெரிவித்தார்.
அத்துடன் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் பிரதிவாதிக்கு உத்தரவிட்ட மெஜிஸ்ட்ரேட் அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கும் தடைவிதித்தார்.
0 comments :
Post a Comment