Wednesday, September 4, 2013

சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஒரு பகிரங்க மடல் விடுக்கிறார் எஸ்.எஸ்.கணேந்திரன்!


நரிக்குண்டடி,பாட்டா சுண்டிக்குழி,கட்டை ரவி போன்ற கொலைகாரர்களை தலைமைதாங்கி வழி நடாத்திய மண்டையன்; குழுச் செயலாளர் நாயகம் எனப்படும் அலுகோசு நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஒரு பகிரங்க மடல்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஒரு உன்னத தலைவன் மாற்று அமைப்புக்களாலும் 'எஸ் கி தோழர்' என அன்போடு அழைக்கப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டவருமான தோழர் பத்மனாபாவை பதவி மோகம் கொண்ட இந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மறந்திருக்கலாம். ஆனாலும் மக்களுக்கு நினைவூட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமே!

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினூடாக பத்மனாபாவை இழந்த நிலையில் அவ் அமைப்பை தலைமை தாங்கிய நடாத்திய பிரபல மதுபானச் சலை வியாபாரியும், கோழிப்பண்ணை கபடதாரியுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ் சுபாஷ் விடுதியில் தங்கியிருந்துகொண்டு யாழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை நினைவுகூர வேண்டிய மிக முக்கிய காலமிது.

பரியோவான் கல்லூரியின் ஒரு சிறந்த மாணவன் அகிலன்.

கல்வி - விளையாட்டு என்பதோடு மட்டுமல்லாமல் கவிதை கட்டுரைகளென்று எத்தனையோ திறமைகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்த அப்பாவி அகிலன், ஆயுத விடுதலைப் போராட்டம் துளிர் விட்டெழுந்த காலத்தில் பரிதி என்கின்ற கையெழுத்து பத்திரிகையையும் தனியாகவே எழுதி சிறு வயதிலேயே போராட்டத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்குரியவன்.

விடுதலைப் போராட்டத்தில் ஆயுதமே தூக்காத அந்த அப்பாவியை கும்பிடக் கும்பிட சுட்டுத்தள்ள மண்டையன் குழுவின் கொடூர கொலைகாரன் பாட்டாவிற்கு உத்தரவிட்ட மண்டையன் குழு தலைவன் சுரேஷ் பிரேமச்சந்திரனாகிய உமக்கு யாழ் மக்களிடம் வாக்கு கேட்க எத்தகைய அருகதை உண்டு என்பதை கூறமுடியுமா?

இந்திய - இலங்கை ஒப்பந்த காலத்தில் நீர் நடாத்தி முடித்த கொலை கொள்ளை,கற்பழிப்பு போன்றவற்றை பயத்தின் காரணமாகய் தட்டிக்கேட்க எமது மக்கள் கலங்கியிருந்த காலத்தில் காம வெறியோடு உமது அனுமதியுடன் அடாவடித்தனம் காட்டிய உமது அமைப்பினரை இறப்பது ஒரு முறைதான் என்ற துணிவோடு பழைய பூங்கா முகாமிற்கு என்னோடு இளம் வாலிபர் கிறிஸ்தவ சங்கத்தில் பூப்பந்து விளையாடும் இந்திய இராணுவ அதிகாரி பெர்னாண்டோவுடன் அம் முகாமில் இருந்த பிரிகேடியர் காலோனிடம் உமது அமைப்பின் அட்டகாசங்களை தெளிவுபடுத்தச் சென்றவேளை நீர் 'கோல்ட்லீப்' சிகரட் புகைத்தபடி உமது கொலை வெறியுடன் என்னைப் பார்த்து முறைத்து, 'உன்னைப் பார்த்துக் கொள்கின்றேன்' என்று சொன்ன கதை உம்மால் மறக்க முடியுமா?

அன்று நான் யாழ் மாநகர சபையில் உறுப்பினராக இருந்தபோது நீர் கொழும்பில் அரசாங்கத்தின் பூரண பாதுகாப்பில் இருந்த வேளையில் நானும் எனது நண்பனும் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினருமான அரவிந்தனும் உம்மைச் சந்திக்க உமது அலுவலகத்திற்கு வந்தபோது அதே 'கோல்ட்லீப்' சிகரட் புகைத்தபடி தமிழர் விடுதலைக் கூட்டணி புலிகளுக்கு சார்பானவர்கள், குறிப்பாக ஜோசப் பரராஜசிங்கம், பொன்.செல்வராசா, துரை ராசசிங்கம், சேனாதிராசா போன்றோரை போட்டுத் தள்ளும்வரை கூட்டணி உருப்படாது எண்று சொன்ன கதையை உம்மால் மறுக்கத்தான் முடியுமா?

சந்திரிகா அரசாங்கத்தில் அன்றைய கடற்றொழில் அமைச்சரும் தற்போதைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ இருந்த காலத்தில் நீர் அந்த அமைச்சின் ஆலோசகராக இருந்துகொண்டு அரசாங்க ஊதியத்தையும் பெற்று சமிற் மாடிக் கட்டிடத்தில் உமக்கென அரச விடுதியையும் பெற்று சுகபோக வாழ்க்கையையும் அனுபவித்த சுவாரசியமான சம்பவத்தை உம்மால் மறுதலிக்க முடியுமா?

நீர் கொழும்பில் பூரண அரச பாதுகாப்புடன் சுகமாக வாழ்ந்த காலங்களில் உமது அமைப்பை யாழில் நிலை நிறுத்தி மக்களுடன் மக்களாக தன்னை அர்ப்பணித்து, இன்று நீர் உமது இருப்புக்காக வாய் கிழியப்போற்றும் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட றொபட்டை உமக்கு நினைவிருக்கின்றதா?

உமக்கு புலிகளின் ஆசீர்வாதத்துடன் முதுகெலும்பு முறுக்கேற்றப்படும்வரை உமக்கு வழிகாட்டியாய் இருந்த, வரலாற்றில் முதல் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாளையாவது எப்போவாவது எண்ணிப்பார்த்தீரா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் திரு. விக்னேஸ்வரன், சம்பந்தன் சுமந்திரன் போன்ற சந்தர்ப்பவாதிகளினால் இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும் அவர் ஒரு சிறந்த கல்விமான், முன்னாள் நீதியரசர் என்கின்ற வகையில் முதலமைச்சர் வேட்பாளருக்கோ அல்லது முதலமைச்சர் பதவிக்கோ மிகவும் தகுதி வாய்ந்தவர் என்பது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்படியாப்பட்ட ஒரு மனிதனை வருகை விரிவுரையாளராக மட்டுமே தொழில் புரியும் உமது தம்பி சர்வேஸ்வரனுடன் ஒப்பிடுவதோ அல்லது அவரைவிட அதிக வாக்குகள் பெற வேண்டுமென்ற உமது கற்பனையோ எந்த விதத்தில் நியாயமாகுமென்பதையாவது சிந்தித்தீரா?

இப்போ விடயத்திற்கு வருகின்றேன்.........................

உமக்கு பாதுகாப்பளிப்பது யார்?

உமது குடும்பம் எங்கே?

உமது மட்டக்களப்பு மதுபான வியாபாரத்தை மறைக்கமுடியுமா?

உமக்கு எத்தனை சொகுசு வாகனங்கள் இந்தியாவில் உள்ளன?

உமது கட்டளையால் கொல்லப்பட்ட எமது இன மக்களுக்கு சொல்லப்போகும் பரிகாரமென்ன?

உமது தலைமையில் உமது உறுப்பினர்களால் கற்பழிக்கப்பட்ட யுவதிகளின் சோக வரலாற்றுக்கு என்ன சொல்லப்ப்போகிறீர்?

உமக்கே ஒரு தகுதி இல்லாத வேளையில் உமது தம்பியருக்கு வாக்கு கேட்க உமக்கு என்ன அருகதையிருக்கின்றது?

உமக்கு துணிவிருந்தால் சொல்லும் ஈ.பி.டி.பி தவராசா சொன்னதுபோல் நான் யாழ்ப்பாணம் வரத் தயார் என்று. ஒரு விவாதத்திற்கு நீர் தயாரா?

இறுதியாக கோழிப்பண்ணை அமைத்துக்கொடுக்க வாங்கிய பணமெங்கே? 'இலங்கைநெற்' உனது பிறாடு ஒன்றைத்தான் வெளியே கொண்டுவந்துள்ளது. இவ்வாறு எத்தனை பிறாடுகள் வெளிவர உள்ளது என்பது உமக்கு தெரியுமா?

எஸ்.எஸ்.கணேந்திரன்

3 comments :

Anonymous ,  September 4, 2013 at 9:23 AM  

This election is an intelligent test for the tamil voters.They need to analyse everthing very deeply upto the bottom and to the best of their knowledge.In regard to the past just iamgine sjv and his group dramtized us and finally nothing achieved and now sam and his group play the same game .Please wait a moment and think quietly analyse all the informations and do the best selection even the raw hands,with sincerity and intelleigence are the best choice.One thing is sure there cannot be smoke without fire.

Anonymous ,  September 4, 2013 at 5:41 PM  

Voters duty to come out from the sjv and sam era.this is a new era think positively and look for the bestones and not the corruptedones.if we do wrong selections like the past we have to pay the price.

Anonymous ,  September 4, 2013 at 10:07 PM  

well allways 2 comments with same sort of English . fools u rite and comment ur self

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com