Thursday, September 12, 2013

அனைத்து மாகாண சபைக்கும் சம அந்தஸ்து இதில் மாற்றமில்லை வதந்திகளை நம்பவேண்டாம்- வவுனியாவில் ஜனாதிபதி

நாட்டில் உள்ள சகல மாகாண சபைகளுக்கும் பாரபட்சமற்ற வகையில் சமஅந்தஸ்தும், மாறுபாடு எதுவும் அற்ற அதிகாரங்களும் உள்ளன அதேபோல வடக்கு மாகாணத்துக்கும் எந்தவித குறைவும் அற்ற அதிகாரங்கள் உள்ளன அவற்றை அரசு பறித் தெடுக்க ஒரு போதும் முயற்சிக்காது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வவுனியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஆட்சி நடத்த ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களே வடக்கு மாகாணத்திற்கும் வழங்கியுள்ளோம்.

இன்று சிலரது தேர்தல் விஞ்ஞாபனங்களை எடுத்துப் பார்க்கும்போது நான்கு வருடங்களுக்கு முன் இருந்த கோரிக்கைகளே மீண்டும் விடுக்கப்படுகிறது அவர்களுக்கு நான் விசேடமாக ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த நாட்டைத் துண்டு துண்டாகப் பிரிக்க பிரபாகரனுக்கு இடமளிக்கப்படாதது போன்று உங்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது அதனைத் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

அந்தக் கோரிக்கையின் பிரதிபலன்களை நீங்கள் நன்கு அறிவீர்கள் அன்று முஸ்லிம் மக்களை தங்கள் கையில் கிடைத்த உடைகளோடு செல்லுமாறு விரட்டினர் சிங்கள மக்களையும் விரட்டியடித்தனர் ஜனநாயகத்தை மதித்த தமிழ்த் தலைவர்களை ஒவ்வொருவராகக் கொலை செய்தனர் அதனால் அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனக்குறிப்பிட்டார்.

அனைத்து மதங்களையும் ஒவ்வொரு இனத்தையும் மதிக்கிறோம் அவர்களது பண்பாடு, கலாசாரம் என்பவற்றை பாதுகாத்து அனைவரும் சமாதானமாக ஒரே நாட்டில் வாழ பழகிக்கொள்ள வேண்டும் எனவே அனைவரும் இணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப அபிவிருத்தி செய்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பழகிக்கொள்ள வேண்டும்.

தனியே கொள்கை ஒன்றை உருவாக்கிக் கொண்டு ஈழம் அமைப்போம், நாட்டைப் பிரிப்போம் என்று கூறினால் அவர்கள் இந்த நாட்டில் வாழ முடியாது.

அன்று கதைத்ததைப் போன்று இந்த நாட்டை வேறுபடுத்த இன்று கதைத்து பயனில்லை. இப்போதுள்ள சுதந்திரத்தை இழக்க யாரும் தயாரில்லை தம்புள்ளையில் சிங்கள பிள்ளைகள் தமிழ் பற்றுக் கொள்ள வேண்டும் என கோருகின்றனர். கிளிநொச்சி மக்கள் சிங்கள ஆசிரியர் ஒருவரை கோருக்கின்றனர். இவைதான் மக்களின் மனதில் உள்ளது.

இனவாதம், மதவாதத்தை தூண்டினால் நாட்டில் அபிவிருத்தியை காண முடியாது வடக்கே காணிப் பிரச்சிணை, வீட்டுப் பிரச்சினை இருப்பதை நான் அறிவேன் அனைவரும் இணைந்தால்தான் அதனை சீர் செய்யமுடியும் ஒரே நாளில் ஒரே மாதத்தில் அதனை செய்ய முடியாது பல வருடங்களாக தேங்கிக்கிடந்த பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து வருகிறோம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com