Thursday, September 26, 2013

நீண்ட ஆரோக்கியம் பெற!

இறைவன் பூமியை படைத்து அதில் இயற்கை வளங்களை உருவாக்கி அவற்றை அனுபவிக்க மனிதனையும் படை த்தான். பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அனைத்தையும் படைத்துள்ளான். இவற்றை சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பது மனிதன் மட்டுமே. அவனது பேராசை இதற்கு காரணமாக உள்ளது எனலாம்.

இதனால் பல்வேறு நோய்கள் உண்டாகி, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மகிழ்ச்சியை தொலைத்து மன உளைச்சலோடு வாழ்ந்து வருகிறான் தற்போது நம் நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இருப்பினும் நோயின்றி வாழ முடியாத நிலையே நிலவுகிறது.

மனிதனின் ஆயுட்காலம் மட்டும் வரையறுக்க முடியாத நிலை நிலவுகிறது. தற்போதைய நிலையில் மனித இனம் விழித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஏனெனில் தற்போதுள்ள மகிழ்ச்சி, நிம்மதியும் நம்மை விட்டு போய்விடும் ஆபத்து இருக்கிறது.

எனவே நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற பின்வரும் முறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். இவை அனைத்தும் இயற்கையோடு இணைந்ததாகும்.

இயற்கை உபாதைகளை அடக்கவோ, தவிர்க்கவோ கூடாது.

காலை, மாலை என 2 வேளைகள் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மூலிகை பற்பொடிகளை பயன்படுத்தி காலை, இரவு என 2 வேளை பல் துலக்க வேண்டும்.

ஆண்டுக்கு இருமுறை அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து உட்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் கிடைக்கும்.

வாரம் 2 முறை அல்லது ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் அன்றைய நாளில் தயிர், மோர்,கீரை, மீன், கருவாடு, நண்டு, இறால் மீன் போன்றவற்றை உண்ணக் கூடாது. சைனஸ் தொந்தரவு, மூக்கடைப்பு, சளி, இருமல், தும்மல், காய்ச்சல் ஆஸ்துமா உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.

தினசரி நல்லெண்ணெய், அல்லது தேங்காய் எண்ணெயை தலையில் தேய்க்க வேண்டும். இல்லாவிடில் கண்பார்வை மங்குதல், பேன், தலைவலி, தூக்கமின்மை, மறதி போன்றவை ஏற்படும். எள் எண்ணெயே தலைக்கும் சமையலுக்கும் நன்மை பயக்கும்.

பயன்படுத்தும் பாத்திரங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இயற்கை உபாதைகளுக்குப் பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

தலைக்கு அடிக்கடி சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும்.

ஷாம்பு போட்டு குளிப்பது, கிரீம் சோப்பு பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

தரமற்ற எண்ணெய்யை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பதார்த்தங்களை உண்ணக் கூடாது.

வீட்டு பலகாரங்களையும் அளவோடு உண்ணுதல் நலம்.

குளிர் பானங்களை அருந்துவதால் சளி, இருமல், சைனஸ் தொந்தரவுகள் நாமே காசு கொடுத்து அழைத்துக் கொள்கிறோம் இதனை தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவுகளை அடிக்கடி உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.

உணவில் தினமும் 6 சுவைகளும் இருக்குமாறு உண்ணுதல் நலம் பயக்கும். எந்த சுவையும் அளவோடு இருக்க வேண்டும் எந்த சுவையும் மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் ஏற்படும் அபாயம் உண்டு.

மீன், நண்டு, ராட்டு, கருவாடு சாப்பிடும் பொழுது தயிர், மோர், கீரை வகைகளை தவிர்த்து மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி சேர்ந்த ரசத்தை மட்டும் உணவோடு சேர்த்து சாப்பிடலாம் அல்லது தனியாக குடிக்க அஜீரணம் ஏற்படாது, வாந்தி, பேதி ஆகாது.

முன்பு உண்ட உணவு செரித்த பின்பு அடுத்த வேளை உணவு உண்ண வேண்டும்.

அசைவ உணவு சாப்பிட்ட பிறகு எலுமிச்சை பழரசம் + தேன் + இஞ்சிச்சாறு தேவையான அளவு கலந்து குடித்தால் வயிறு உப்புசம், செரியாமை, குமட்டல், வாந்தி, புளித்த ஏப்பம் இவைகள் தீரும்.

சைவ உணவு செரிமான நேரம் 3 மணி நேரம். அசைவ உணவு 4 மணி நேரம்.

மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தாகத்தை அடக்குவது, சிறுநீரை அடக்குவது, உணவு மாறுபாடு, தொற்று நோய் கிருமிகளின் தாக்கம் இவைகளாலே சிறு நீரகத்தில், பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

நாம் தினசரி உணவாகப் பயன்படுத்தும் அனைத்துமே நம் உடல் உறுப்புகளை பாதுகாக்கும் அற்புத மருந்துகள். உணவே மருந்து ஒவ்வொன்றுமே பல்வேறு சத்துக்களை உள்ளடக்கிக் கொண்டு அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்து நோய் வரவிடாமல் தடுக்கும் தடுப்பு மருந்துகள். ஆன்டிபயாடிக்ஸ் “ஆரோக்கியமாக வாழுகின்ற எந்த மனிதனும் மருந்து உட்கொள்ளவில்லை. மருந்து உட்கொள்ளும் எந்த மனிதனும் ஆரோக்கியமாக வாழ முடியவில்லை” நோய்களின் குறி, குணங்களைக் கூறி மருத்துவக் கடைகளில் எந்தவித டானிக், மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் நிறுத்தவும் கூடாது.

அலர்ஜி ஏற்பட்டால் மருத்துவரை உடனே பாருங்கள்.

நோய் சரியானால் சொல்லுங்கள், நோய் சரியாக விட்டால் அவரிடமே மீண்டும் செல்லுங்கள், நம்பிக்கையே பலம்.

முழு உடல் பரிசோதனை வருடம் ஒருமுறை இக்கால கட்டத்தில் செய்து கொள்வது மிக மிக அவசியம் தற்காப்பாகும்.

சர்க்கரை நோயாளிகள், இதயம் சம்பந்தப்பட்ட நோயாளிகள் பிறநோய் உள்ளவர்கள் அனைவரும் தொடர் சிகிச்சை, தொடர் கண்காணிப்பு மிக மிக அவசியம்.

எந்த வித மருந்துகளும் பத்தியம் என்பது இல்லை. நோய்களுக்கு தகுந்தவாரே உணவு முறைகள் கட்டுப்பாடுகள்.

உணவை மருந்தாக கொடுத்து உடலையும், உயிரையும் வளர்ப்பது நரை, திரை, மூப்பு, சாவு வராமல் இளமையோடு இருக்கச் செய்து இதுவல்லவோ மருத்துவம் சிறந்த மருத்துவம் சித்த மருத்துவம்.

சித்த மருத்துவம் மருந்தல்ல உணவு, நாம் உண்ணும் உணவுப் பொருட்களையும், நம்மைச் சுற்றியுள்ள மருத்துவ குணமுள்ள மூலிகைகளையும் மருந்தாக்கி கொடுத்து நோயை முற்றிலும் நீக்கி நீண்ட ஆயுளையும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுப்பதே சித்த மருத்துவம். நாட்டு வைத்தியம்! பாட்டி வைத்தியம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com