யாழ். கோண்டாவிலில் பஸ் விபத்து! வீதியோரத்தில் மோட்டார் சைக்கிளில் நின்ற 24 வயது இளைஞன் பலி!
யாழ். பலாலி வீதி கோண்டாவில் சந்திக்கு அருகில் நேற்று(02.09.2013) மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற வாகன விபத்தில் காளிகோவிலடி, கொக்குவில் கிழக்கை சேர்ந்த ரவிக்குமார் பிரிட்மன் என்ற 24 வயதுடைய இளைஞன் ஒருவர் தலை நசுங்கி ஸ்தலத்திலையே உயிரிழந்துள்ளார்.
யாழ். நகரில் இருந்து தென்னிலங்கை சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பலாலி வீதி வழியாக பலாலியை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் கோண்டாவில் சந்திக்கருகில் வீதியோரமாக மோட்டார் சைக்கிளில் நின்ற இளைஞனை மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
மரணமடைந்த இளைஞன் விபத்து நடைபெற்ற பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் பிரதேசவாசிகள் விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸை பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லவிடாது மறியலில் ஈடுபட்டனர்.
0 comments :
Post a Comment