Monday, September 23, 2013

வட மாகாண சபைக்கு 13 இன் அனைத்து அதிகாரங்களும் தேவை! – ரீஎன்ஏ வாய் திறக்கத் தொடங்குகிறது...

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தாம் முன்வரவுள்ளதாகவும், போதியளவு அதிகாரத்தை அரசாங்கம் பெற்றுத் தருவதற்கு முன்வருமாயின் தேசிய பிரச்சினையைத் தீர்க்கும் பாராளுமன்றத் தேர்வுக்குழுவில் கலந்துகொள்வதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிடுகிறது.

நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அக்கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தன் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்துரைக்கும் போது, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளவாறான அனைத்து அதிகாரங்களும் வட மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிக்கேற்ப செயற்பட வேண்டும் எனவும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடன்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு கருத்துரைத்துள்ள வட மாகாண சபையின் முதலமைச்சருக்கான முதன்மை வேட்பாளர் சீ. விக்னேஷ்வரன் (1,32 255 விருப்பு வாக்குகள்) , அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படக் கூடாது எனவும், ‘நாங்கள் சட்டத்திற்கு எதிராக எந்தவொரு செயற்பாட்டிலும் இறங்கமாட்டோம். எந்தவொரு விடயத்தையும் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்தே செய்வோம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)


1 comments :

ஈய ஈழ தேசியம் ,  September 23, 2013 at 7:40 PM  

வட மாகாண சபைக்கு 13 இன் அனைத்து அதிகாரங்களும் தேவை!

மதுவிற்கு அடிமையாகியுள்ள அல்லது அடிமையாக்கப்பட்டுள்ளஒரு நிலையிலேயே உங்களால் வட மாகாண மக்கள் இனவாத போதைக்கு அடிமைபடுத்தபட்டுள்ளார்கள். இதை பயன்படுத்தி அனைத்து மக்களையும் அடக்கியாளும் அதிகாரங்களை பெற்று கொள்ளுங்கள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com