விடுதலைப்புலிகளின் வாகன தேவைகளை பூர்த்தி செய்த கொழும்பு வர்த்தக நிலையத்திற்கு சீல் வைப்பு! வர்த்தகரும் கைது!
விடுதலைப்புலிகள் போர் காலத்தில் தமது வாகன தேவை களை பூர்த்தி செய்து கொள்ளவும் வாகனங்களுக்காக உதிரிபாகங்களை கொள்வனவு செய்யவும் கொழும்பில் நடத்தி வந்த வர்த்தக நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினர் அந்த வர்த்தக நிலை யத்தின் தலைவரை கைது செய்து விசாரணைக்கு கூட்டிச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு 14 சுகததாச விளையாட்டு அரங்கிற்கு அருகில் 5 மாடி வர்த்தக நிலையத்தை நடத்தி வந்துள்ளதுடன் பல அரசியல் வாதிகளுடன் அரசியல் தொடர்புகளை கொண்டிருப்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
8 பேர்ச்சஸ் நிலப்பரப்பை கொண்ட இந்த கட்டடம் புலிகளின் பணத்தில் கொள் வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், இந்த வர்த்தக நிலையம் புலிகளின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான கிட்டு என்பவரின் மேற்பார் வையின் கீழ் இயங்கி வந்துள்ளதாகவும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸார் கூறினர்.
குறித்த வர்த்தக நிலையத்தை பொலிஸார் சீல் வைத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment