Friday, August 23, 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன்? சரத் குமார

அரசாங்கம் வடக்கு கிழக்கு மீனவர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுவரும் இவ்வேளை யில் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறுவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பது ஏன் என பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் வடக்கு கிழக்கு கடற்பரப்பை இந்திய மீனவர்கள் ஆக்கிரமிக்கின்றனர். இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத் திற்கு பாரியளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாய்திறக்காமல் மௌனம் காப்பது தென்னிந்திய அழுத்தம் காரணமாகவா என பிரதியமைச்சர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இலங்கை கடல் எல்லைப் பகுதியில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படு கின்றனர். இதுவொரு பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. இலங்கை மீனவர்களின் உரிமையும் நலனும் இந்திய மீனவர்களால் நேரடியாக பாதிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய மீனவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு எவ்வித கருத்துக்களையும் வெளியிடாதது கண்டனத்திற்குரியது என பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காது அவர்களிடம் வாக்கு கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு என்ன அருகதையுள்ளது எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

1 comments :

Anonymous ,  August 23, 2013 at 4:25 PM  

TNA needs there Tamil Ealam in south India,therfor thay are supporting indian fishers smugler works.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com