Monday, August 5, 2013

யாழ். தமிழரசுக்கட்சியினரின் பிரதேசவாதம் : சம்பந்தன் வடக்கில் பிரசாரத்திற்கு வர வேண்டாமாம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு அதன் தலைவர் சம்பந்தனை மிகவும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. அவர் தாங்கி நிற்கும் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவி என்பனவும் பறிபோகக்கூடிய சமிக்கைகள் தென்படுகின்றது.

இந்த கைங்கரியத்தில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் சுரேஸ் அணித் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் பெரு வெற்றி கண்டுள்ளதை நிறைவேறியுள்ள நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றது.

வட மாகாணத்தின் முதலமைச்சராக கனவு கண்டு கொண்டிருந்த சுரேஸ் பிறேமச்சந்திரன், நிலைமைகளை அவதானித்தவுடன் எட்டாக்கனி புளிக்கும் என்ற கதையாக தான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை, நான் மத்தியில் இருக்கின்றேன் மாகாணத்தில் தம்பியை கொண்டு வருகின்றேன், அவர் வென்றால் அவருக்கு ஒரு அமைச்சர் பதவியை கொடுங்களேன் என பெட்டிப்பாம்பாக அடங்கிக்கொண்டார்.

ஆனால் அவர் பெட்டிப்பாம்பாக அடங்கியது அவர் தம்பியின் அமைச்சர் பதவியை மாத்திரம் இலக்காக கொண்டதல்ல , ஒரே கல்லில் இரு மாங்காய்கள், மாவையை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்து அதற்கு தனது கட்சி முழுமையான ஆதரவு என்ற சமிக்கையையும் காட்டி நகமும் தசையுமாக இருந்த சம்பந்தனையும் மாவையையும் இன்று முகம் பார்க்க முடியாத பரம எதிரிகளாக்கியுள்ளார்.

சம்பந்தனின் அகம்பாவக்குணத்தை அப்படியே அறிந்து வைத்திருந்த சுரேஸ் தருணம்பார்த்து அடித்த ஆப்பு தமிழரசுக் கட்சியின் தானைத்தலைவன் என நெஞ்சு நிமிர்த்தி நின்ற சம்பந்தனின் வரும் தலைவர் தெரிவின்போது அடுத்த தெரிவு ஒன்றுக்கு இடமுண்டு என தூக்கத்தை குலைத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களுக்கு சம்பந்தனை அழைக்க வேண்டாம் என யாழ். தமிழரசுக்கட்சியினர் மாவை சேனாதிராசாவுக்கு தெரிவித்துள்ளனர். சம்பந்தன் மீது யாழ். மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரசார மேடைகளில் ஏறினால் பெரும்பாலான யாழ். மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவே வாக்களிப்பார்கள். இதனால் அவரை யாழ்ப்பாணம் அழைத்து வர வேண்டாம் என யாழ். தமிழரசுக்கட்சியினர் மாவை சேனாதிராசாவுக்கு தெரிவித்துள்ளனர்.

சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு பிரசாரத்திற்கு வரும் போது சிங்கள பேரினவாத கொடியான சிங்க கொடியையும் கொண்டு வந்து விடுவார் என்றும் தமிழரசுக்கட்சியில் உள்ள ஒரு சாரார் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான காரணங்கள் கூறப்பட்டாலும் உள்ளே பிரதேசவாதம் ஒழிந்திருப்பது ஒன்றும் மறைப்பதற்குரியதல்ல. யாழ் தமிழரசுக் கட்சியினர் தாம் பாரம்பரியகட்சி என்றும் அதற்கு கிழக்கு மாகாணத்தான் ஒருவன் தலைமை தாங்குவது ஏற்புடையதல்ல என்ற புகைச்சல்களும் உள்ளது.

எது எவ்வாறாயினும் தேர்தலின் பின்னர் மாகாண சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றினால் அங்கு அமையப்போகும் மாகாண சபையில் அமைச்சர் பதவி நியமனங்களின் பின்னால் மக்கள் படப்போகும் பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்.


1 comments :

Anonymous ,  August 5, 2013 at 6:26 PM  

Afterall a provincial council election,how they blame each other to make use of the opportunity.This is the tamil politics.There is no pragmatism at all.On those days M/S SJV &Amirthalingam & co cornered late Mr.G,G.They did only the politics,but they achieved nothing absolutely nothing.Still the same flavour is going on.It is regrettable that tamils have only greedy,power hunger,swollen headed and jeolusy packed,selfishminded people as their political leaders.It is really hard for them to come out from the clutches of these guys.We certainly beleive that Mr.C:Vigneswaran is the only suitable candiadte for CM,but the rest of the TNA only God knows.May His Almighty help us from this disaster.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com