Monday, August 19, 2013

யாழில் தென்பகுதி தொழிலாளி கொலை தொடர்பில் தம்பதி கைது

யாழ். பொலிஸ் நிலையத் திற்கென நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத் தொகுதியில் வேலைபார்த்து வந்த தென்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை அடித்துக் கொலை செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதியரை கைது செய்துள்ளதாக யாழ். சிறு குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு எல்.விக்கிரம ராச்சி தெரிவித்தார்.

விழுந்து காயங்களுக்குள்ளாகியதாக கூறி யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த குருநாகல் பகுதியைச் சேர்ந்த அப்புஹாமி நிஷாந்த (வயது - 42) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த நபரின் உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி, குறித்த நபரின் கையில் வெட்டுக் காயங்களும், தலையில் அடிகாயமும் காணப்படுவதாக பொலிஸாருக்குத் தெரிவித்தார். உயிரிழந்த நபர் யாழ். பொலிஸ் நிலையத்திற்கென நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய கட்டடத்தில் வேலை செய்து வருகின்றார் என்றும், கொழும்புத்துறைப் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அவர் தங்கியிருந்த நண்பனின் தாயார் மற்றும் தந்தையாரிடம் விசாரணை மேற்கொண்டதை அடுத்து அவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி கணவன், மனைவி இருவரையும் விசாரணை மேற்கொண்ட பின்னர் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ள தாக தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  August 19, 2013 at 11:41 AM  

It is a schoking sorrowful and a saddest news.This may have happened
owing to political motivation,in order to create racial hatred scene.
However we are sorry for the poor singhalese employee.Why not we respect each other.Why not we follow the religious preachings.Why not we live together as brothers and sisters.until we soften our hearts we cannot reach the goal in our lives.Now in these days brutality plays a major role.it is a curse.
The murderers should be traced down and the maximum punishment should be given to them.The culprits behind the scene will come into light,if the law plays a good genuine role

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com