கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக விழிப்புலனற்றோருக்கு ஆசிரியர் நியமனம்!
கிழக்கு மாகாணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு (விழிப் புலனற்றோர்) முதற் தடவையாக ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும், மாற்றுத் திறனாளிகள் எழு பேருக்கே இந்த ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தெரிவித்தார்.
இவர்களுக்கான நியமனம் கிழக்கு மாகாண கல்வி திணைக்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது எனவும் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார். இவர்கள் தமிழ், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களை கற்பிப்பர். வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளிலேயே இவர்கள் ஆசரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு என விசேட திட்டமொன்று மாகாண கல்வி திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களின் ஆசிரிய செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அவதானிக்கப்படும்' என மாகாண கல்வி பணிப்பாளர் நிசாம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரமவினால் இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கப்பட்டன.
0 comments :
Post a Comment