Sunday, August 18, 2013

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பலாபலன் வடபுல மீன்பிடித்தொழிலில் 11 வீதம் உயர்ச்சி. ராஜித சேனாரட்ண.

பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக, 7 சதவீதமாக காணப்பட்ட வடபுல மீன்பிடி கைத்தொழில் இன்று 18 சதவீதத்தை எட்டியுள்ளதாக, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

ரோலர் படகு மூலம் மீன்பிடிப்பதை, நாம் தடை செய்துள்ளோம். யாழ். குடாநாட்டின் மீன்பிடிதுறை சார்ந்த அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தேவையான பணிப்புரைகளை வழங்கியுள்ளேன். ரோலர் படகு உட்பட சட்டவிரோத வலைகளையும் தடை செய்ய, நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இனவாதத்திற்கு நாம் அடிபணியாது, சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதங்களின்றி அனைவரும் ஒரே குடும்பத்தின் சகோதரர் போன்று வாழக்கூடிய ஒரு நாட்டைக்கட்டியெழுப்ப, நாம் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

வடபுல மீனவர்களுக்காக உயிர்காப்பு உபகரணங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் ராஜித சேனாரட்ன இவ்வாறு தெரிவித்தார்.

இதற்காக கடற்றொழில் திணைக்களம் 120 இலட்சம் ரூபா நிதியை செலவிட்டுள்ளது. கிளிநொச்சி, புள்ளைபலாய், கிளாலி, பரமன்கிராய், நாச்சிக்குடா ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்ட சமூக சேவை மண்டபங்களையும், அமைச்சர் திறந்து வைத்தார். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, றிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் சரத்குமார குணரட்ன உள்ளிட்டோர், இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com