பிரித்தானியாவில் கிரிக்கட் போட்டியின் போது புலிக்கொடியுடன் நுழைந்தவருக்கு இன்ரர்போல் ஊடாக பிடியாணை!
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின் போது இங்கிலாந்து கார்டிப் மைதானத்தில் ஈழக்கொடியுடன் பிரவேசித்த லோகேஸ்வரன் மணிமாரனுக்கு எதிராக சர்வதேச நிதி மோசடி வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.
இரகசிய பொலிஸார் இது தொடர்பில் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி இலங்கையில் நிதி மோசடிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் இவரை கைது செய்வதற்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக ஜேர்மன் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்த நீதிமன்றத்தினாலும் இவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிஸார் பிரித்தானியாவில் பிரஜாவுரிமை பெற்றுள்ள இவர் 4 பெயர்களில் தம்மை அடையாளப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இலங்கைக்கு வருகை தந்து மீண்டும் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள சந்தேக நபரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் மூலம் சிவப்பு அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment