இலங்கையுடனான முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா படுதோல்வி!
சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடனான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 180 ஓட்டங்களால் அமோக வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று (20.07.2013) பகலிரவு போட்டியாக நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, குமார் சங்கக்காரா அதிரடியாக பெற்ற 169, தரங்க 43, ஜயவர்த்தன 42 ஓட்டத்துடன் 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 31.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 180 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
பந்துவீச்சில் இலங்கை அணியின் பெரேரா, ஹேரத் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் தில்ஷான் 2 விக்கெட்களையும் வீழ்த்தியதுடன் போட்டியின் ஆட்ட நாயகனாக குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டதுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1இற்கு பூச்சியம் என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.
0 comments :
Post a Comment