Monday, July 8, 2013

சுன்னாகம் நகர மத்தியிலிருந்து வெளியேறும் இராணுவம்!

சுன்னாகம் நகர மத்தியிலுள்ள இராணுவத்தினர் தாம் தங்கியுள்ள பொதுமக்களின் வீடுகளிலிருந்து இம்மாத இறுதியில் வெளியேறவுள்ளதுடன்,பொது மக்களது வீடுகளை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளதாகத் சுன்னாகம் இராணுவ பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் நகரமத்தி ஜே/198 கிராம அலுவலர் அலுவலகத்தில் நேற்று(08.07.2013) முற்பகல் 10.00 மணிக்கு இராணுவத்தினர் தங்கியிருக்கும் வீடுகளின் உரிமையாளர்களுக்கும், சுன்னாகம் இராணுவ பொறுப்பதிகாரிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போதே இராணுவ அதிகாரி இதனை குறிப்பிட்டார்.

இது மட்டும்லாது சுன்னாகம் நகரப்பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள வீடுகளின் உரிமையாளர்கள் நாளை(09.07.2013) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு காணி உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு வருகைதருமாறு சுன்னாகம் நகர் மத்தி கிராம அலுவலர் அறிவித்துள்ளார்.

சுன்னாகம் நகர மத்தியபகுதி மற்றும் காங்கேசன்துறை வீதியில் என 14 வீடுகளில் இராணுவத்தினர் தற்போது நிலைகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com