Sunday, July 7, 2013

மாவைக்காக மாழப்போகும் தம்பி நிஷந்தனுக்கு தெரியுமோ மாவையின் மறுமுகம்? எஸ் எஸ் கணேந்திரன்

சேனாதி ஆயுதம் தூக்காத அரசியல் வாதி? கூட்டணிக்குள் யாருக்குமே தெரியாமல் கைத்துப்பாக்கி வைத்திருந்த ஒரேஒருவர் சேனாதிதான் இதுவெல்லாம் உங்களுக்கு தெரியாது.

எதிர்வரும் வட மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் செயலாளர் எனப்படும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரால் அரசியலில் அறிமுகமான சோமசுந்தரம் சேனாதிராசாவை நன்கு புரிந்திருக்க முடியாத நிஷாந்தன் பதவி மோகம் கொண்ட மாவைக்காக மாண்டுபோக நினைப்பது நகைப்புக்குரியது.

என்னால் நன்கு தெரியப்பட்ட விடயமும் அண்மையில் திரு.ஆனந்தசங்கரி அவர்கள் மாவைக்கு எழுதிய ஒரு மடலில் வந்தசெய்திகளையும் நிஷாந்தன் பார்க்கத்தவறிவிட்டார்போல் உள்ளது. ஆரம்ப காலங்களில் தந்தை செல்வாவுடன் சில காலம் இருந்த சேனாதிராசா தந்தையின் மரணத்தின் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊதியம் பெற்று அரசியல் செய்த ஒரே ஒரு கொள்கைவாதி.

எத்தனையோ உயிர்கள் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலங்களில் தனது குடும்பத்தை இந்தியாவில் பாதுகாப்பாக வைத்துவிட்டு கொழும்பில் கூட்டணியின் அலுவலகத்தில் இலவசமாகத்தங்கியிருந்துகொண்டு அவர் போட்ட ஆட்டங்கள் நிஷாந்தனுக்குத் தெரியாது.
அமிர்தலிங்கம் இறந்தவுடன் அவர் வகித்த பாராளுமண்ற ஆசனமும் கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியும் தனக்கே வேண்டும் என தனது தகுதியே தெரியாத மாவை போட்ட சண்டித்தனம் ஏராளம். பின்னர திரு.ஆனந்தசங்கரியின் சிபாரிசில் பாராளுமண்றம் அனுப்பப்பட்டவர்தான் இந்த மாவை சேனாதிராசா.

பாராளுமண்றம் செண்றதும் அவர் செய்த முதல் மக்கள் சேவை தனது சொந்த சகோதரியை தனது பிரத்தியேக செயலாளர் எனக்கூறி வெளிநாட்டில் செட்டில் பண்ணையதுதான். இவர் எப்படிப்பட்ட மக்கள் சேவகன்?

பாராளுமண்றம் கலைக்கப்பட்டதும் மாவிட்டபுரத்தை சேர்ந்த சேனாதிக்கு அம்பாறையில் என்ன அக்கறை வந்ததோ தெரியவில்லை தேர்தலும் கேட்டார் தோற்றும் போனார். அத்தோடு விட்டபாடில்லை அம்பாறையில் இருந்து சில அடியாட்களை அழைத்துக் கொண்டு கொழும்புக்கு வந்த சேனாதி கூட்டணியின் போனஸ் ஆசனத்தை தனக்கே தரவேண்டும் என்று அட்டகாசம் காட்டினார். இந்த சேனாதியை தூர நோக்கு கொண்ட கொள்கைவாதி எண்கிண்றார் தம்பி நிஷாந்தன்.

கூட்டணியினரால் வடக்கில் இயங்க முடியாத காலத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் தம்பி நிஸாந்தன் உறுப்பினராக இருந்த யாழ் மாநகர சபை முதன்மை வேட்பாளராக போட்டியிட சேனாதிக்கு சந்தர்ப்பம் வழ்கங்கப்பட்ட போது கூட்டணியின் செல்வாக்கை எடைபோட்டுப்பார்க்கக்கூட முடியாத ஆயுதம் தூக்காத ( ஆனால் தூக்கிய )அகிம்சைவாதி சேனாதி தான் தோற்றுப்போனால் தனது பதவி மோகத்திற்கு ஆப்புவைக்கப்படும் என்பதையும் புரிந்து தனது உயிருக்கும் பயந்து தான் போட்டியிடவில்லை எனத்தெரிவித்திருந்தார்.

தேர்தலும் நடந்தது தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்ட யாழ் மாநகரசபையினையும் வலி வடக்கு பிரதேச சபையையும் கூட்டணியே கைப்பற்றியது. சரோஜினி அக்கா முதல்வரானார் மூன்று மாதங்களிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த ஈனச்செயலை கண்டிக்கத்தவறியது மட்டுமல்ல அவரது இறுத்திச்சடங்குகளிலும் கலந்துகொள்ளாது இந்தியாவிலேயே இருந்தார். ஆனால் கலாநிதி நீலன் திருச்செல்வம் தற்கொலை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டதும் வேட்டி கட்டித்திரிந்த சேனதி இளநீல சவாரி சூட்டுடன் சுடலைக்கு இந்தியாவில் இருந்தே பறந்துவந்தார் அரசியல் அனுபவம் செயல்திறன் கொண்ட சேனதி. ஏனெண்று நிஷாந்தனுக்குப் புரியுமோ?

ஆனால் எனக்குப் புரிந்தது. அண்று நானும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ் மாநகரசபை உறுப்பினராகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் செயற்பட்ட காலமது. திரு.நீலனின் இறுதிச்சடங்கு முடிவுற்று அலுவலகம் திரும்பியதும் திரு. ஆனந்தசங்கரியிடம் நீலனின் பாராளுமண்ற வெற்றிடத்தை கடைசி வரை சேனாதிக்கு கொடுக்கக்கூடாது என பல கட்சி உறுப்பினர்கள் முன்வைத்தனர் அதில் நானும் ஒருவன். அந்த வெற்றிடத்திற்கு கட்சியின் சிரேஸ்ட்ட உறுப்பினர்களாகவிருந்த தலைவர் திரு.சிவசிதம்பரம் அல்லது திரு.ஆனந்தசங்கரி இருவரில் ஒருவரே நியமிக்கபடவேண்டும் என பலரும் விரும்பினர். ஆனாலும் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் உயிரிளப்பால் பாராளுமண்றம் நுளைந்த சேனாதிக்கு பாராளுமண்ற உறுப்பினர் ஊதியம் பெற சில மாதங்கள் தேவைப்பட்ட நிலையில் திரு.ஆனந்தசங்கரி அவர்கள் தானாக மனம்விரும்பி சேனாதியை பாராளுமண்றம் அனுப்பினார் பாவம் இதுவும் தம்பி நிஷாந்தனுக்குத் தெரியாது.

அன்று நாங்கள் மாநகரசபையை நிர்வகித்த்போது யாழ் மாநகரசபைக்கு போதிய நிதிகள் ஒதுக்கப்படாமல் ஈ பி டி பியினர் நிர்வகித்த சபைகளுக்கே அரசினால் நிதிகள் ஒதுக்கப்பட்ட வேளையில் அந்த அநீதிக்கு எதிராகா ரவிராஜ் தலைமையில் நான் உட்பட அரவிந்தன் முகுந்தன் ஆகியோர் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் முன்னால் உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டோம் அதனை அறிந்த அமைச்சரும் தற்போதைய ஆளுனருமான திரு.அளவி மௌலானா பாராளுமண்ற உறுப்பினராக இருந்த சம்பந்தனிடமும் சேனாதியிடமும் பாராளுமண்றத்தில் வைத்தே தனது எதிர்ப்பைத்தெரிவிக்க அரசாங்கத்தை பகைக்க விரும்பாத சம்பந்தனும் சேனாதியும் இந்த உண்ணாவிரதம் பற்றி கட்சிக்கு அறிவிக்கவும் இல்லை தமக்கு இதில் ஏற்பும் இல்லை என கூறிவிட்டு தங்களை நல்லவர்களாக காட்டிவிட்டு அமைச்சுக்கு முன்னால் ஓடி வந்த சேனாதி எம்மோடு சில நிமிடங்கள் தெருவில் அமர்ந்திருந்துவிட்டு எங்களுக்கு பழரசம்தந்து எங்களையும் திருப்திப்படுத்தினார் இந்த சந்தர்ப்பவாத அரசியல்வாதி.

பாராளுமண்றத்தில் இருந்துகொண்டு மக்களுக்கு சேவையாற்ற திறனற்ற சேனாதிக்கும் கூட்டமைப்பிற்கும் முலமைச்சர் பதவிஒண்றுதான் மிச்சம்.

கூரைமீது ஏறி கோழி பிடிக்கத்தெரியாத கூட்டம் வானம் ஏறி வைகுந்தம் காட்டப்போகுதாம்.
தம்பி நிஷாந்தன் இப்படியாப்பட்ட சுயநலம் சந்தர்ப்பவாதம் பதவிமோகம் கொண்டவர்களுக்காக வாழ வேண்டிய உங்கள் வாழ்க்க்கையை தீயிற்கு இரையாக்காதீர்கள்.

4 comments :

Anonymous ,  July 7, 2013 at 4:56 PM  

persons led the tamil society as the leaders aimed only on power struggle and not in the interest of tamil society,as the father,as the captain as the lieutenant,they had bundle of titles given not by universities by their supporters.Still the same power is struggle is going on,whoever comes to power may be Mavai or another person similar to Mavai,the profit would be the same.

Anonymous ,  July 8, 2013 at 3:19 AM  

None of the garbage, selfish Tamil politicians are eligible to be a CM. Tamil people need a honest, neutral, respected, decent, educated Tamil CM for their northern province.

Retired Judge Hon.Vikinaraja is the best candidate for the CM position.

Anonymous ,  July 8, 2013 at 7:48 AM  

As a retired judge Mr.Vicknarajah may be a good suggestion,why not the TNA not thinking deeply to appoint a suitable as a CM candidate.Suitable person is not the problem of the Jaffna society.Influential persons are entitled to occupy any positions.
After the declaration of independence,backdoor influence,bribe,Nepotism,just a popularity is enough to occupy any important seats in the public sector.
So the CM matter is just a peanut matter for TNA may be even to the voters of NP

Anonymous ,  July 8, 2013 at 2:13 PM  

Kanenthiran is wrong. Nishanthan knows that Mavai is going to be the CM candidate. So Nishanthan gave the statement to get his name in the candidate list.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com