கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நான்கு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படவுள்ளன
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக 4 தேசிய பாடசாலைகளை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சரவை இதற்கான அங்கீ காரத்தை வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங் களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப் பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கிளிநொச்சி மத்திய கல்லூரி, முழங்காவில் மத்திய கல்லூரி, முல்லைத்தீவு மாவட்டத்தின் வித்தியானந்தா வித்தியாலயம், மல்லாவி மத்திய கல்லூரி ஆகியன தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படவுள்ளதுடன், அந்த நான்கு பாடசாலைகளை யும் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதே நேரம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியதவியுடன் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பல வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 98 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாகவும், செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப் பட்டது.
0 comments :
Post a Comment