இணைய சேவை வழங்கிகளில் ரகசியமாக தகவல்கள் சேகரிக்கும் அமெரிக்கா
ரகசிய தகவல் தேடுதலின் ஒரு பகுதியாக அமெரிக்க உளவுத்துறை கூகுள் போன்ற 9 பெரிய இணைய சேவை வழங்கிகளை அணுகுவதாக ‘வாஷிங்டன் ரிபோர்ட்’ தினசரிப் பத்திரிக்கை அறிவித்துள்ளது. ‘நேஷனல் செக்கியூரிட்டி ஏஜென்சி (என்எஸ்ஏ)’ மற்றும் ‘எஃப்பிஐ’ இணைய சேவை வழங்கிகளை நேரடியாக அணுகி தனி நபர்களின் இணைய தள நடவடிக்கைகளான மின்னஞ்சல், உரையாடல் ஆகியவற்றைக் கண்காணிப்பதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
‘மைக்ரோசாஃப்ட்’, ‘யாகூ’, ‘கூகுள்’, ‘ஃபஸ்பௌக்’, ‘ஆப்பிள்’, ‘பால்டாக்’, ‘ஏஓஎல்’, ‘ஸ்கைப்’, மற்றும் ‘யூ டியூப்’ போன்ற பெரிய நிறுவனங்கள் இதில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மிகவும் ரகசியமாகக் கையாளப்படும் ‘PRISM’ என்றழைக்கப்படும் இத்திட்டம் என்எஸ்ஏயின் சைகை உளவு இயக்குநரகத்தில் ஆய்வுக்கு பயன்படுத்தக்கூடியது ஆகும். 2007ம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டம் தற்போது அதீத வளர்ச்சி கண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தினமும் வழங்கப்படும் மிக ரகசியமான மற்றும் முக்கியமான தகவல்களுக்கு செய்தி வழங்கக்கூடிய முக்கிய பங்களிப்பாக இருக்கிறது.
0 comments :
Post a Comment