கட்டாக்காலி நாய்கள்தொடர்பில் அமைச்சரவையில் பேசி முடிவெடுக்கப்படும்-டக்ளஸ்
யாழ் மாவட்டத்தில் உள்ள கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் அமைச்சரவையில் பேசி முடிவெடுக்கப்படும் என யாழ் மாவடடச் செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கட்டாக்காலி நாய்களினால் தற்போது பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகாரித்துள்ளது. இதனால் நாய்க்கடிக்கு இலக்காகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நாள் தோறும் யாழ் போதனா வைத்தியசாலையில் குறைந்தது 15 பேர் நாய், பூனைக்கடிக்கு உள்ளாகி கிசிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஊசி மருந்து ஏற்றுவதற்கு பெருளவு பணத்தினை வைத்தியசாலை செலவு செய்து வருகின்றது.
இவ்வாறான கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்த உள்ளுராட்சி மன்றங்கள் உதவ வேண்டும் என இந்த கலந்துரையாடலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த அமைச்சர், நாய்களைக் கொல்லக் கூடாது என்பதில் அரசாங்கம் கொள்கையாக இருந்து வருகின்றது. இவ்வாறு யாழ் மாவட்டத்தில் பிடிக்கப்படும் கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் அமைச்சரவையில் கதைத்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார்.
3 comments :
You may make arrangements to kill the street dogs.But it is a great sin that we do.Why not you organize a place for the street dogs and cats to live.Animal lovers and charity organizations may help the poor street dogs and the cats at least to have a peaceful life under a shelter.This what some of the foreign western countries are doing in order to help the poor animals.We can make so many prayers at the temples.we can make vows.But kindness,love and sympathy bring the God closer to us.Soften hearts always see the invisible God.Massacre of the poor animals unacceptable
முதலில், வாயில்லா ஜீவன்களை தெருவில் விட்டது மக்களின் தவறு. அதற்காக அதை கொள்வது மிகவும் தவறு. நாயிகளின் இனபெருக்கத்தை ஊசி, மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த வழிசெய்வதுடன், பொறுப்பின்மையான, அலட்சிய போக்குடைய, கொடூர மனப்பான்குள்ள மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்க வேண்டும்.
அதுவே ஒரு சிறந்த அரசாங்கத்தின் செயல்ப்பாடாக அமையும்.
Incl. him self also.
Post a Comment